மணிப்பூருக்குச் செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து – வடகிழக்கு ரயில்வே அறிவிப்பு!!
மணிப்பூரில் இரு தரப்புக்கு இடையே ஏற்பட்ட மோதலின் காரணமாக தற்போது பதற்றமான சூழல் நிலவுகிறது.இதையடுத்து வன்முறையை கட்டுப்படுத்த தேவையான பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மோதல் வெடிக்கும் பகுதிகளில் இருந்து பொது பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.வன்முறை குறித்து அம்மாநில முதல்வரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிலைமையை கண்காணித்து வருவதாகவும் வன்முறையை கட்டுப்படுத்த சிறப்பு அதிரடி படையினர் தேவைப்படும் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் , அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் வடகிழக்கு எல்லை ரயில்வே மணிப்பூருக்குச் செல்லும் அனைத்து ரயில்களையும் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. மேலும் நிலைமை சீராகும் வரை எந்த ரயில்களும் மணிப்பூருக்குள் நுழையாது என்றும் தெரிவித்துள்ளது .ரயில் இயக்கத்தை நிறுத்துமாறு மணிப்பூர் அரசு அறிவுறுத்தியதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இரயில்வே விளக்கம் அளித்துள்ளது.