நட்சத்திர விடுதி மற்றும் பார்களில் இவர்களுக்கெல்லாம் தடை! அதிகாரிகள் போட்ட உத்தரவு!

Photo of author

By Hasini

நட்சத்திர விடுதி மற்றும் பார்களில் இவர்களுக்கெல்லாம் தடை! அதிகாரிகள் போட்ட உத்தரவு!

தற்போது கொரோனா தொற்று இரண்டு அலைகள் முடிந்து மக்கள் சாதாரண சூழ்நிலைக்கு திரும்பி வருகின்றனர். ஆனாலும் மூன்றாவது கொரோனா அலையை எதிர்பார்த்து இருப்பதன் காரணமாக சில முன்னேற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது.

எனவே, செங்கல்பட்டு மாவட்டத்தில், மாமல்லபுரம் கிழக்குக் கடற்கரைச் சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள கோவளம், முட்டுக்காடு, கேளம்பாக்கம், மற்றும் மாமல்லபுரம் சுற்றுப்பகுதிகளில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் கடற்கரை பண்ணை வீடுகள் தங்கும் நட்சத்திர விடுதிகள் போன்றவை பல மாதங்களுக்குப் பிறகு தற்போது தான் திறக்க ஆயத்தமாகி உள்ளது.

எனவே தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி இவைகளை திறக்க பல்வேறு கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தற்போது சுற்றுலா வரும் பயணிகளின் பயன்பாட்டுக்காகவும் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் மூன்றாவது அலை பரவாமல், கட்டுப்படுத்தும் வகையில் அரசு இந்த முடிவுகளை எடுத்துள்ளது.

அங்கு தங்க வரும் பயணிகள் மூலம் ஒருவருக்கொருவர் தொற்று பரவாமல் தடுக்கவும், அதிகரித்து விடாமல் இருக்கவும், பல வகைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நட்சத்திர ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் போன்றவற்றை நிர்வாக இயக்குனர்கள் மற்றும் அதன் மேலாளர்களை அழைத்து கொரோனா விதிமுறைகளை பின்பற்றுவது தொடர்பான ஒரு கூட்டம் போட வலியுறுத்தப் பட்டது.

அவர்களிடம் கொரோனா தோற்று பரவலின் காரணமாக இந்த கருத்துக்களை வலியுறுத்தி இருக்கின்றனர். மாமல்லபுரம் போலீசார் பேரூராட்சி துறை, உணவுத் துறை சார்பில் அந்தந்த துறை அதிகாரிகளின் முன்னிலையில் சென்னை மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஓட்டலில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அதேபோல் அதிக உடல் வெப்பநிலை உள்ளவர்களை நட்சத்திர விடுதி, மது பார்கள், நீச்சல் குளங்களுக்கு கூட  அனுமதிக்கக் கூடாது என்றும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.