Breaking News

மக்களின் பிரச்சனைகள் அனைத்தும் இந்த 15 நாட்களுக்குள் தீர்வு! ஸ்டாலினின் அதிரடி உத்தரவு!  

All people's problems are solved within these 15 days! Stalin's action order!

மக்களின் பிரச்சனைகள் அனைத்தும் இந்த 15 நாட்களுக்குள் தீர்வு! ஸ்டாலினின் அதிரடி உத்தரவு!

முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தற்போது அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.அதில், ஒவ்வொரு தொகுதியிலும் மக்கள் பல கோரிக்கைகளை வைத்திருப்பர். குறிப்பாக சில கோரிக்கையை  மட்டும் மீண்டும் மீண்டும் மக்கள் நிறைவேற்றித் தரும்படி கேட்டுக் கொண்டிருப்பர். இவற்றையெல்லாம் குறையின்றி மக்களுக்கு நிறைவேற்றும் வகையில் முதல்வர் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் எம்எல்ஏக்கள் அனைவரும் அவரவர்  தொகுதிகளில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் மக்கள் கேட்கும் கோரிக்கையை தன்னிடம் தெரிவிக்க வேண்டும். அதில்  முக்கிய 10 கோரிக்கைகளை மட்டும் கூற வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்த கோரிக்கைகள் அனைத்தும் அடுத்த 15 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியருக்கு எம்எல்ஏக்கள் அனுப்பி விட வேண்டும் என முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். மக்களின் தேவைகளை நன்கு உணர்ந்து அவற்றை நிறைவேற்றும் முக்கிய பொறுப்பு எம்எல்ஏக்களுக்கு உள்ளது. அதன்படி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதும் தலையாயக் கடமை என தெரிவித்துள்ளார்.

Leave a Comment