ஜூலை 1 முதல் அனைத்து பள்ளிகளும் காலை 8 மணிக்கு திறக்கப்படும்! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
கொரோன பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. தற்போது தான் மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு செல்லுகின்றார்கள். இந்நிலையில் கோடை விடுமுறை காரணமாக ஜூன் மாதம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்து. இதனைத் தொடர்ந்து ஜூலை 1 முதல் பள்ளிகள் திறக்கும் நிலையில் ஹரியானா மக்கள் தொடர்புத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் ஹரியானா மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் செயல்படும் நேரமானது மாற்றப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
ஹரியானாவில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் மாணவ ,மாணவியர்கள் மற்றும் குழந்தைகள் பள்ளியில் மதியத்திற்கு மேல் படிப்பதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. அதனை தடுக்கும் விதமாக ஜூலை 1ஆம் தேதி முதல் ஹரியானா மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் காலை 08:00 மணி முதல் மதியம் 2:30 வரை செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவானது கோடை வெயிலை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது எனவும் ஹரியானா மக்கள் தொடர்பு துறை தெரிவித்துள்ளது.