அனைத்து சீரியல் நடிகர்களும் ஒன்று கூட போறாங்க!! அது என்ன சீரியல் தெரியுமா??

Photo of author

By CineDesk

அனைத்து சீரியல் நடிகர்களும் ஒன்று கூட போறாங்க!! அது என்ன சீரியல் தெரியுமா??

CineDesk

All serial actors fight even one !! Do you know what serial it is ??

அனைத்து சீரியல் நடிகர்களும் ஒன்று கூட போறாங்க!! அது என்ன சீரியல் தெரியுமா??

விஜய் டிவி என்றாலே சீரியலும், ரியாலிட்டி ஷோக்களும் தான். குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் அனைத்து சீரியல்களுக்கும் உள்ள ரசிகர்கள் எண்ணிக்கை அதிகம் தான். ஆரம்பத்தில் சீரியல் என்றால் அது சன் டிவி மற்றும் கலைஞர் டிவி என்று தான் இருந்தது. ஆனால் சமீபத்தில் சில வருடங்களாகவே சீரியலுக்கு புகழ்பெற்ற தொலைக்காட்சியாக ஜீ தமிழ் மற்றும் விஜய் டிவி போன்ற தொலைக்காட்சிகளை தான் மக்கள் அதிகம் விரும்பி பார்க்கின்றனர்.

இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் பிரபல நாடகம் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த நாடகம் 4 அண்ணன் தம்பிகள் மற்றும் மூத்த அண்ணி  நடுத்தார வாழ்க்கையை வாழும் குடும்பத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட நாடகம். மேலும் இந்த நாடகம் கடந்த சில வருடங்களாக விஜய் தொலைக்கட்சியில் ஒளிப்பரப்பு செய்யப்பட்டு வருகிறது. சமீபத்தில் விஜய் டிவி ஒளிபரப்பு செய்யப்பட்ட விஜய் டெலி அவார்ட்ஸ் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அந்த நிகச்சியில்  பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகமும் பல விருதுகளை வாங்கி குவித்தது.

மேலும் இந்த நாடகத்தில் இரண்டாவது மகன் ஜீவா கதாபாத்திரத்தின் மனைவி மீனாட்சி கதாபாத்திரத்திற்கு வளைகாப்பு நடைபெற்றது. இந்த வளைகாப்பு நிகழ்ச்சியை ஒரு மணி நேர நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்பட்டது. மேலும் அந்த நிகழ்ச்சியில் விஜய் டிவியின் பிரபலங்கள் பலர் பங்கேற்பது போல ஒளிபரப்பு செய்தனர். மேலும் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் மூத்த மகன் சத்திய மூர்த்தி கதாபாத்திரத்தின் மனைவி தனலஷ்மி கதாபாத்திரத்திற்கு  சீமந்தம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அந்த நிகழ்ச்சியையும் ஒரு மணி நேர நிகழ்ச்சியாக ஒளிபரப்ப தொலைக்காட்சி முடிவு செய்துள்ளது. மேலும் மீனா கதாபாத்திரத்திற்கு நடைபெற்ற சீமந்தத்தை விட தனம் கதாபாத்திரத்திற்கு நடைபெற உள்ள சீமந்தத்தை பெரிய அளவில் நடத்த முடிவு செய்துள்ளார்களாம். இதனால் விஜய் தொலைக்காட்சி ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் அந்த நிகழ்ச்சியை பற்றிய தகவல்களை விரைவில் வெளியிட கோரி விஜய் தொலைக்காட்சியிடம் கேட்டுள்ளார்கள்.