பிரியங்கா ரெட்டி கொலையாளிகள் என்கவுண்டர்: பெரும் பரபரப்பு

Photo of author

By CineDesk

பிரியங்கா ரெட்டி கொலையாளிகள் என்கவுண்டர்: பெரும் பரபரப்பு

CineDesk

Updated on:

பிரியங்கா ரெட்டி கொலையாளிகள் என்கவுண்டர்: பெரும் பரபரப்பு

தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் கடந்த 27-ம் தேதி இரவு கால்நடை பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட நால்வரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை வழங்க வேண்டும் என பெண் எம்பிக்கள் பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தனர். மேலும் இந்த வழக்கில் குற்றவாளிகளை விரைவாக விசாரித்து, கடுமையான தண்டனை வழங்கவும், வழக்கை விசாரிக்க விரைவு நீதிமன்றத்தை அமைக்கவும் தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் கொலை வழக்கில் கைதான நால்வரும் இன்று அதிகாலை சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டு எப்படி கொலை செய்தனர் என்பதை நடித்து காட்டிய போது நால்வரும் தப்பி செல்ல முயன்றதாக தெரிகிறது. இதனை அடுத்து காவல்துறையினர் நால்வரையும் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.