தன் படத்திற்காக கேட்ட நடிகைகள் அனைவரும் மறுக்க!! மனம் உடைந்த சுந்தர் சி!!

Photo of author

By Gayathri

தன் படத்திற்காக கேட்ட நடிகைகள் அனைவரும் மறுக்க!! மனம் உடைந்த சுந்தர் சி!!

Gayathri

All the actresses who asked for her film refused!! Heartbroken Sundar C!!

முறைமாமன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நடிகர் சுந்தர் சி. இவருடைய இயக்கத்தில் 1996 இல் உருவான உள்ளத்தை அள்ளித்தா படத்தினை இன்று வரையில் ரசிக்காத ரசிகர்களே கிடையாது என்று கூறலாம்.

அப்படிப்பட்ட படத்திற்காக இயக்குனர் சுந்தர் சி அவர்கள் மிகவும் கடினப்பட்டதாக தற்பொழுது தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்திற்காக இயக்குனர் சுந்தர் சி அவர்கள் பல நடிகைகளை தேடி தேடி களைத்தே போய்விட்டாராம். ஒரு கட்டத்திற்கு ஏதேனும் ஒரு நடிகை இருந்தால் கூட்டி வாருங்கள் படத்தினை துவங்கி விடுவோம் என்று சொல்லவும் செய்துள்ளார்.

இயக்குனர் சுந்தர் சி முதலில் நக்மாவை தான் தன்னுடைய படத்தில் நடிப்பதற்காக பேசியுள்ளார். அவர் அதிக அளவில் பணம் கேட்டதால் அவருக்கு ஓகே சொல்லாமல் அடுத்த ஹீரோயினை படத்திற்காக தேட ஆரம்பித்துள்ளனர். அப்பொழுது, ரஞ்சிதா, சங்கவி, ரோஜா என அந்த காலகட்டத்தில் மிகவும் பீக்கில் இருந்த நடிகைகளை பேசியிருக்கின்றனர். ஆனால் அப்போது இவர்கள் மிகவும் பிஸியாக இருந்துள்ளனர்.

உடனே சுந்தர் சி ‘ப்பா.. அந்த உழவன் படத்துல நடிச்சிருக்கு பாருங்க.. அதையே நடிக்க வைக்கலாம்’ என ரம்பாவை பரிந்துரை செய்திருக்கிறார். ரம்பா அப்போது உழவன் படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அதன் பிறகே ரம்பாவை உள்ளத்தை அள்ளித்தா படத்தில் நடிக்க வைத்திருக்கின்றனர்.

இந்த திரைப்படம் சுந்தர் சிக்கு மட்டும் இன்றி ரம்பாவிற்கும் ஒரு திருப்புமுனையை உருவாக்கியது என்று கூறும் அளவிற்கு இந்த படத்தின் வெற்றி அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

படத்தில் அவருக்கான ஓப்பனிங் சாங். இதுவரை எந்த நடிகைக்கும் அப்படி அமையவில்லை. மர்லின் மன்றோ கெட்டப்பில் அவரை காட்டிய விதம் இன்றுவரை அந்த பாடலை ரீமேக் செய்யாதவர்களே இல்லை. ரம்பா என்றாலே அழகிய லைலா என்ற பாடல்தான் அனைவருக்கும் நியாபகம் வரும்.