இனிமே வர எல்லா படமுமே ஓடிடில தான்!! திரையரங்குகளுக்கு பாய் பாய் சொன்ன தயாரிப்பாளர்கள்!!
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் ஆரம்பித்து இரண்டு வருடங்கள் ஆக உள்ளது. இந்த கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மேலும் சில மாதங்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் தமிழ்நாடு அரசு மக்களை பாதுகாக்கும் வகையில் பல திட்டங்களை அமலுக்கு கொண்டு வந்தது. பல கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்றி வந்தனர். இதனால் மக்கள் வாழ்வாதாரத்தில் பெரும் வீழ்ச்சியை கண்டனர். மேலும் இந்தியா பொருளாதார வீழ்ச்சியும் அடைந்தது.
இதை தொடர்ந்து அதிகம் பாதிப்பு சினிமா துறையினருக்கும் தான் கொரோனா பரவல் அதிகமாக இருந்ததால் பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க மால்கள், திரையரங்குகள், உணவகங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூட்டம் சேர்க்கும் இடங்களை தடை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. இதனால் திரையரங்குகள் கடந்த 2020 ஆண்டு முழுவதும் மூடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சினிமா துறையில் எடுக்கப்பட்ட படத்தை வெளியிட முடியாமல் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகினர். பல கோடி செலவழித்து எடுத்த படங்களை நேரடியாக திரையரங்குகளில் வெளியிட முடியாததால் பல இயக்குனர்கள் வீழ்ச்சியை கண்டனர். இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் கூட திரையரங்குகளில் படங்கள் வெளியிடாததால் பெரும் வீழ்ச்சியை கண்டனர். இந்த நிலையில் தான் படங்களை ஓடிடி தளத்தில் மூலம் வெளியிட திரைப்பட இயக்குனர்கள் முடிவு செய்தனர்.
மேலும் திரைப்படங்களை நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிடுவது குறித்து திரையரங்கு உரிமையாளர்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர். இருந்தும் வேறு வழி இல்லாத காரணத்தால் ஒடிடி தளங்களில் தான் வெளியிட வேண்டும் என்று முடிவு செய்தனர். மேலும் ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷின் பென்குயின், சூர்யாவின் சூரரைப்போற்று, ஆர்யாவின் டெடி போன்ற பல முன்னணி நடிகர்களின் படம் ஓடிடியில் வெளியானது. மேலும் கொரோனா காலத்தில் திரையரங்குகளுக்கு சென்று படம் பார்க்க முடியாத மக்களுக்கு இந்த ஓடிடி முறை மிகவும் பிடித்து அதற்கு பெருமளவில் வரவேற்பு கொடுத்தனர். இதனால் ஓடிடி நிறுவனம் பல கோடிகளை சம்பாதித்து வருகிறது. தற்போது ரிலீஸான தனுஷின் ஜகமே தந்திரம் படம் மற்றும் தற்போது ரிலீசாக உள்ள ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை, சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள வாழ் ஆகிய படங்கள் ஓடிடியில் தான் வெளியாக உள்ளது.
இதை தொடர்ந்து தெலுங்கில் வெங்கடேஷ் நடித்துள்ள நரப்பா படம் மற்றும் த்ரிஷ்யம் 2 பாடமும் ஓடிடியில் தான் வெளியாக உள்ளதாம். மேலும் இப்படி தொடர்ந்து அனைத்து படங்களும் ஓடிடியில் வெளியாவதால் படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு எந்தவித சிக்கலும் இல்லாமல் செலவும் இல்லாமல் லாபம் அதிகமாக கிடைப்பதாக கூறுகின்றனர். இந்த வகையில் தெலுங்கில் வெளியாக உள்ள நரப்பா படத்தை 40 கோடிக்கும் த்ரிஷ்யம் 2 படத்திற்காக 36 கோடியும் கொடுத்து ஓடிடி தளங்கள் வாங்கி உள்ளதாகவும் தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர். மேலும் திரையரங்குகளில் வெளியாகி படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்து ரசிகர்கள் வந்தால் தான் இயக்குனர்களுக்கும் லாபம். ஆனால் இந்த ஓடிடி தளங்களில் ரிலீசாகும் படங்களுக்கு அந்த அச்சம் கிடையாது. ஓடிடி தளங்கள் நல்ல விலை கொடுத்து படத்தை வாங்கி கொள்வதால் தயாரிப்பாளர்களுக்கு எந்தவித கவலையும் இல்லை என்றும் தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.