முக அழகை கெடுக்கும் பருக்கள் அக்குள்,தொடை,கழுத்து,முதுகு உள்ளிட்ட இடங்களில் வளர்கிறது.இதை வீட்டில் இருக்கின்ற பொருட்களை வைத்து எளிதில் நீக்குவது குறித்து இங்கு சொல்லப்பட்டுள்ளது.
தீர்வு 01:
சின்ன வெங்காயம்
முதலில் ஒரு சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி கொள்ளுங்கள்.பிறகு இதை உரலில் போட்டு இடித்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.
இந்த வெங்காய சாறை உடலில் உள்ள மருக்கள் மீது பூசுங்கள்.இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் உடலில் உள்ள மருக்கள் அனைத்தும் உதிர்ந்துவிடும்.
தீர்வு 02:
பூண்டு
ஒரு வெள்ளை பூண்டை தோல் நீக்கிவிட்டு உரலில் போட்டு நசுக்கி சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.இந்த பூண்டு சாறை மருக்கள் மீது பூசினால் அவை சீக்கிரம் உதிர்ந்துவிடும்.
தீர்வு 03:
ஆப்பிள் சீடர் வினிகர்
நாட்டு மருந்து கடையில் ஆப்பிள் சீடர் வினிகர் கிடைக்கும்.ஒரு பாட்டில் வாங்கிக் கொள்ளவும்.இந்த ஆப்பிள் சீடர் வினிகர் ஒரு தேக்கரண்டி அளவு கிண்ணத்தில் ஊற்றிக் கொள்ளவும்.
பிறகு ஒரு காட்டன் பஞ்சை ஆப்பிள் சீடர் வினிகரில் நினைத்து மருக்கள் மீது பூசி வந்தால் அவை சீக்கிரம் உதிர்ந்துவிடும்.
தீர்வு 04:
எலுமிச்சை சாறு
மருக்களை உதிர வைக்கும் தன்மை எலுமிச்சை சாறில் இருக்கின்றது.எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறு எடுத்து மருக்கள் மீது தடவி வந்தால் மருக்கள் நீங்கிவிடும்.
தீர்வு 05:
கற்றாழை ஜெல்
மருக்களை ஒரு வாரத்தில் உதிர வைக்க கற்றாழை ஜெல்லை பயன்படுத்தலாம்.கற்றாழை மடலில் இருந்து ஜெல்லை பிரித்து மருக்கள் மீது பூசி வந்தால் அவை விரைவில் உதிர்ந்துவிடும்.