இந்த பொருட்களுக்கெல்லாம் அனுமதி பெற்றால் மட்டுமே ஏற்றுமதி செய்ய முடியும்! ஒன்றிய அரசின் புதிய கட்டுப்பாடு!
உக்கரை மற்றும் ரஷ்யக்கிடையே நடைபெற்ற போரில் சமையல் எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்தது. தற்போது வரை அதன் நிலை குறைந்த பாடு இல்லை. மேலும் உக்ரைன் ரஷ்யப் போரால் ஏற்றுமதி இறக்குமதியில் உலக நாடுகள் மத்தியில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. ரஷ்யாவில் பெரும்பான்மையான நிறுவனங்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை தடை செய்துள்ளனர். அதேபோல உக்ரைன் அதிகளவு பாதிப்பை சந்தித்ததால் சரியான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வணிகம் செய்ய முடியவில்லை.
இதனால் நமது இந்தியாவில் இருந்து இதர நாட்டிற்கு செல்லும் கோதுமை ஏற்றுமதிக்கு, மத்திய அரசு தடை விதித்தது. தற்பொழுது புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தி மீண்டும் ஏற்றுமதி செய்யலாம் என வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் கூறியுள்ளது. அதாவது கோதுமை மாவு, ரவை போன்றவற்றை ஏற்றுமதி செய்பவர்கள் ஜூலை மாதம் 12ஆம் தேதி முதல் அமைச்சரவை குழுவிடம் அனுமதி பெற வேண்டும். அதன் பிறகு தான் கோதுமை, ரவை ,மைதா உள்ளிட்ட பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
அதேபோல உலக அளவில் கோதுமை தற்பொழுது அதிக அளவில் தட்டுப்பாடாக உள்ளதால் விலையில் சற்று மாறுதல்கள் ஏற்பட்டு வருகின்றது. விலை ஏற்றம் இறக்கத்தினால் அதனின் தரமும் குறைவாக இருக்க கூடுமோ என்று சர்ச்சைகள் கிளம்பி உள்ளது. இதனை எல்லாம் தவிர்க்கும் விதத்தில் இந்தியாவில் இருந்து இதர நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் தரத்தை பராமரிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.