DMK: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருவதற்கு 9 மாதங்கள் இருக்கும் நிலையில் திமுக தனது சார் அதிருப்தி நிலையை திருத்திக்கொள்ள முயற்சித்து வருகிறது. அதன்படி, திமுக ஆட்சிக்கு வந்ததும் ஊழல் பெருகிவிட்டது குறிப்பாக அமைச்சர்கள் பணத்தை சுரண்ட ஆரம்பித்துவிட்டனர் என்ற பேச்சு அடிப்பட தொடங்கியது. இதன் விளைவாக ஊழல் வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் செந்தில் பாலாஜி சிக்கியுள்ளனர்.
தேர்தல் நேரம் நெருங்கும் சமயத்தில் இதன் மூலம் அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது என்பதற்காக இவர்கள் இருவரும் தற்பொழுது அமைச்சரவையிலிருந்து விலகியுள்ளனர். அதுமட்டுமின்றி திமுகவின் மூத்த நிர்வாகியாக இருக்கும் துரைமுருகனையும் ஓரம் கட்ட ஆரம்பித்துவிட்டனர். ஆரம்ப கட்டத்திலிருந்து துரைமுருகனுக்கும் ஸ்டாலின் மகனுக்கும் பொருந்தாமலே இருந்து வருகிறது.
குறிப்பாக வாரிசை முன்னிலைப்படுத்தி துணை முதலமைச்சராக்கியதில் துரைமுருகனுக்கு பெரிதாக விருப்பமில்லை. ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் இருவரும் மாறி மாறி இது ரீதியாக கருத்து தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இதனை வைத்தே இவரின் இலக்கா-வானது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அமைச்சரவையில் முக்கியமாக பார்க்கப்படும் கனிம வளத்தில் இவரின் சுரண்டல் அதிகமாக உள்ளதாக தொடர்ந்து புகார் வந்துள்ளது.
இதனால் இந்த முக்கிய இலக்காவை ரகுபதிக்கு மாற்றியமைத்து, அவரின் சட்டத்துறை இலக்கா இவருக்கு கொடுத்துள்ளனர். தேர்தல் வரும் சமயத்தில் இந்த அமைச்சரவை மாற்றம் சற்று கவனிக்கத்தக்கதாக உள்ளது. மேற்கொண்டு மீண்டும் ஆட்சியில் அமர வேண்டுமென்றே பல்வேறு நடவடிக்கைகளை திமுக அவசர அவசரமாக செய்து வருகிறது.