TN GOVERNMENT: திமுக நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கட்டாயம் பெண்கள் அனைவருக்கும் குடும்ப அட்டை வைத்து மாதம் ஆயிரம் வழங்குவதாக தெரிவித்தது. அதன்படி முதல் இரண்டு வருடங்கள் இந்த ரீதியாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. தொடர்ந்து மூன்றாவது வருடம் தான் இத்திட்டம் அமலுக்கு வந்தது. அதிலும் இத்திட்டம் குறித்து வரைமுறைகள் போடப்பட்டது. இதனால் பலருக்கும் இத்திட்டம் செல்லுபடியாகவில்லை.
அந்த வகையில் முதலில் ஒரு கோடி 63 லட்சத்து 57 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் அதில் ஒரு கோடி ஆறு லட்சத்து 52 ஆயிரம் பேருக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கினர். இதனால் பெண்கள் பெரும்பாலானோர் அதிருப்தி அடைந்த நிலையில் மீண்டும் இது ரீதியான விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதன்படி மேற்கொண்டு இதிலிருந்து 9 லட்சம் பேருக்கு மட்டுமே மீண்டும் கலைஞர் உரிமைத் தொகையானது கிடைத்தது.
இப்படி இருக்கையில் இந்த வருடம் பட்ஜெட் தாக்குதலில் 13 ஆயிரத்து 807 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது. தற்போது வரை 1.15 கோடி பேருக்கு இத்திட்டம் பயனளிக்கிறது. அந்த வகையில் மாதம் ஆயிரம் என்றால் 1.15 கோடி பேருக்கும் 13,800 கோடி தேவை, மீதம் 7 கோடி மட்டுமே இருக்கும் நிலையில் தமிழக அரசு தற்போது திட்டத்தை விரிவாக்கம் செய்வதாக தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி ஜூன் மாதம் முதல் இதற்கான விண்ணப்ப படிவம் கொடுக்கப்பட உள்ளது.
ஒன்பதாயிரம் மையங்கள் அமைத்தால் ஒரு மையத்திற்கு 100 பேர் என்றால் கூட ஒன்பது லட்சம் பேர் பட்டியலிட நேரிடும். அச்சமயம் இந்த 7 கோடி ரூபாய் போதுமானதாக இருக்காது. சட்டமன்ற தேர்தல் வருவதையொட்டி திட்டமிட்டு அப்பாவி மக்களை ஏமாற்றும் செயல்முறை என ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.