இன்று இரவு இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் அமல்! மீறனால் நடவடிக்கை போலீசார் எச்சரிக்கை!
நாளை புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி மக்கள் அனைவரும் புதிய ஆண்டை வரவேர்ப்பதற்காக இன்று நள்ளிரவு கேக் வெட்டுதல்,பட்டாசு வெடித்தல்,போன்ற கொண்டாட்டங்களில் ஈடுபடுவார்கள்.அப்போது எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறாமல் இருப்பதற்காக புத்தாண்டு கொண்டாட்டங்கள் அமைய வேண்டும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் மெரினா உள்பட கடற்கரை பகுதிகளில் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து உற்சாகமாக வரவேற்பது வழக்கம்.அதனால் இன்று இரவு போக்குவரத்து அனைத்தும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.மேலும் இது குறித்து நேற்று போலீசார் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர்.அந்த அறிவிப்பில் இன்று இரவு புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு மெரினா கடற்கரை,எலியட்ஸ் கடற்கரை மற்றும் பிற பொழுதுபோக்கு பகுதிகளில் அதிகளவு பொதுமக்கள் வருவதினால் உயிரிழப்பு இல்லா புத்தாண்டு முன்னாள் என்ற நோக்கத்துடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
அந்த வகையில் காமராஜர் சாலை மற்றும் ராஜாஜி சாலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட உள்ள போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.கடற்கரை உட்புற சாலை இன்று இரவு 7 மணி முதல் நாளை காலை 6 மணி வரை போக்குவரத்து மூடப்பட்டுள்ளது.கடற்கரை உட்புற சாலையில் இந்த நேரத்தில் வாகனங்கள் நிறுத்த அனுமதி இல்லை.
அங்கு வரும் வாகனங்கள் கலங்கரை விளக்கம் சந்திப்பு வழியாக மட்டுமே வெளியேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.காமராஜர் சாலை போர் நினைவிடம் முதல் கலங்கரை விளக்கம் வரை இன்று இரவு 8 மணி முதல் நாளை காலை 6 மணி வரை வாகனங்கள் செல்ல அனுமதி மறுப்பு.
அடையாறு பகுதியில் இருந்து காமராஜர் சாலைக்கு செல்லும் வாகனங்கள் காரணீஸ்வரர் பகோடா தெருவில் அம்பேத்கர் பாலம் வழியாகவும் நடேசன் சாலை ஆர்.கே.சாலை வழியாக செல்லாலாம்.அதனை தொடர்ந்து டாக்டர் ஆர்.கே.சாலையில் இருந்து காமராஜர் சாலைக்கு செல்லும் வாகனங்கள் வி.எம் தெரு சந்திப்பில் திருப்பிவிடப்படும்.
ஆர்.கே.மடம் சாலை, லஸ் சந்திப்பு மந்தைவெளி, தெற்கு கால்வாய் கரை சாலை வழியாக சாந்தோம் நெடுஞ்சாலை மற்றும் கிரீன்வேஸ் சாலையை சென்றடையலாம். அதனை தொடர்ந்து அனைத்து மேம்பாலங்களும் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை மூடப்பட்டிருக்கும் என தெரிவித்துள்ளனர்.