இந்த அறிகுறிகள் எல்லாம் இருந்தால் லோ சுகர் என்று அர்த்தம்!! மக்களே ஜாக்கிரதை!!

Photo of author

By Selvarani

இந்த அறிகுறிகள் எல்லாம் இருந்தால் லோ சுகர் என்று அர்த்தம்!! மக்களே ஜாக்கிரதை!!

லோ பிளட் சுகர்…….இன்று பலரையும் பயமுறுத்தும் பிரச்சனை. வீட்டுக்கு ஒரு சர்க்கரை நோயாளி என்று ஆகி வரும் இன்றைய காலகட்டத்தில் ரத்த சர்க்கரை அளவு குறைந்தால் அதற்கான அறிகுறிகள் என்னென்ன, முதலுதவி கொடுக்கப்பட வேண்டும் சிகிச்சை என்ன என்பது பற்றிய விழிப்புணர்வு அனைவருக்கும் அவசியமாகிறது.

 

அபாய அளவுகளில் ரத்த குளுக்கோஸ் அளவு குறைவதை ஹைப்போகிளைசீமியா என்று சொல்வோம்.ஹைப்போ என்றால் குறைவு. கிளைசீமியா என்றால் ரத்த குளுக்கோஸ் அளவு என்று பொருள்.

 

70 mg/dl அல்லது 3.9 mmol / L அளவுக்கு கீழ் இரத்த குளுக்கோஸ் அளவுகள் செல்வது. இந்த நிலையை எய்தும் போது நமது உடல் ‘அலாரம்’ அடிக்கத்தொடங்கும்.

 

– இதயத்துடிப்பு அதிகரித்தல்

 

– சோர்வு

 

– படபடப்பு

 

– நடுக்கம்

 

– வியர்த்துப்போதல்

 

– கோரப்பசி

 

– பதற்ற நிலை போன்றவை ஏற்படும்.

 

வீட்டில் இருக்கும்போது லோ சுகர் ஆகிவிட்டால் என்ன செய்வது? எப்படி தவிர்ப்பது என்பதை இப்போது பார்க்கலாம்.

 

இனிப்பு:

 

லோ சுகர் காண அறிகுறிகள் ஏதேனும் தெரிந்தால் உடனடியாக கிச்சனில் இருக்கும் சர்க்கரை ,தேன்,ஜாம் என இவற்றில் ஏதேனும் ஒன்றை எடுத்து சாப்பிடுங்கள். இது உடனடியாக ரத்தத்தில் சர்க்கரை அளவை உயர்த்தும்.

 

உணவு இடைவேளை:

 

மூன்று வேளை நிறைய உண்பதை விட சிறிது சிறிதாக ஐந்து வேளை சாப்பிடுங்கள் .உணவு இடைவேளையை அதிகரியுங்கள். இதனால் ரத்தத்தில் எப்போதும் சர்க்கரை அளவு இருந்து

கொண்டே இருக்கும்.

 

சிலர் தூங்கும் போது லோ சுகர் ஆகி மயக்கம் அடைந்திருப்பார். அதை நாம் கண்டு சிகிச்சை அளிக்கும் முன்னர் பாதிக்கப்பட்ட நபர் மிக மோசமான நிலைக்கு சென்றிருக்க கூட வாய்ப்புகள் உண்டு.இதனை தவிர்க்க முந்திரியை பொடியாக்கி ஒரு டப்பாவில் வைத்துக் கொள்ளுங்கள் .தினமும் இரவு படுக்கச் செல்லும் முன்பாக ஒரு டம்ளர் நீரில் முந்திரி பவுடர் ஒரு டீஸ்பூன், தேன் 2 டீ ஸ்பூன் சேர்த்து கலந்து குடித்துவிட்டு படுக்கச் செல்லலாம்.

காபியில் இருக்கும் கஃபைன் என்ற பொருள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையை உறிஞ்ச கூடியது. அதனால் ஒரு நாளைக்கு இரண்டு முறை, மூன்று முறை என்று குடிப்பதை தவிர்த்திடுங்கள். அதேபோல் ஆல்கஹால் குடிப்பதையும் தவிர்த்திடுங்கள்.

இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது ஆரோக்கியமான உணவு. சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். சீரான உடற்பயிற்சி,வாக்கிங் ஸ்கிப்பிங்,போன்றவை செய்யலாம்.