பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக என்னிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதாக வெளியான தகவல் முழுக்க முழுக்க பொய் என்றும் என்னிடம் யாரும் எந்த விசாரணையும் செய்யவில்லை என்றும் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் அவர்கள் கூறியுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த படுகொலையில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக ஆற்காடு சுரேஷ் அவர்களின் தம்பி பொன்னை பாலு, கஞ்சா விற்பனை செய்த அஞ்சலை, பெண் தாதா மலர்கொடி மற்றும் அதிமுக, திமுக, பாஜக போன்ற கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள் என பலரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
ஆனால் இந்த கொலைக்கு காரணமான முக்கிய குற்றவாளிகளான சீசிங் ராஜா, சம்பா செந்தில் ஆகியோர் தலைமறைவாக இருக்கின்றனர். மேலும் இந்த வழக்கில் சம்பா செந்தில் அவர்களின் நண்பன் மொட்டை கிருஷ்ணன் அவர்களும் இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறப்படுகின்றது. மொட்டை கிருஷ்ணன் அவர்களும் தலைமறைவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.
இந்நிலையில் மொட்டை கிருஷ்ணன் அவர்களுக்கும் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் அவர்களின் மனைவி மோனிஷா அவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறி மோனிஷா அவர்களை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்தனர். இதையடுத்து மோனிஷா அவர்களிடம் மொட்டை கிருஷ்ணன் அவர்களுடன் எதற்காக பலமுறை தொலைபேசியில் பேசியது குறித்தும் வங்கிக் கணக்கில் பணம் பரிமாற்றம் செய்தது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் அவர்களின் மனைவி மோனிஷா அவர்களை தொடர்ந்து இயக்குநர் நெல்சன் திலீப்குமார் அவர்களிடமும் விசாரணை செய்யப்பட்டத்தாக தகவல்கள் வெளியானது. மனைவி மோனிஷா அவர்களிடம் கேட்கப்பட்ட அதே கேள்விகள் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் குமார். அவர்களிடமும் கேட்கப்பட்டதாக கூறப்பட்டது. மேலும் தனிப்படை காவல் துறையினர் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் அவர்களிடம் ஒரு மணிநேரம் விசாரணை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் இது முற்றிலும் பொய்யான செய்தி என்று நெல்சன் திலீப்குமார் அவர்கள் கூறியுள்ளார்.
இது குறித்து விளக்கம் அளித்த இயக்குநர் நெல்சன் திலீப்குமார் அவர்கள் “பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை தெடர்பாக என்னிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர் என்று. தகவல்கள் வெளியாகி வருகின்றது. அது முழுக்க முழுக்க பொய்யான செய்தி. உண்மைக்கு புறம்பானது. என்னிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர் என்று வெளியான தகவல் முற்றிலும் தவறான ஆதாரமற்ற பொய்யான செய்தி ஆகும்.
இந்த வழக்கு தொடர்பாக காவல் துறையினரிடம் இருந்து எனக்கு எந்த சம்மனும் அனுப்பப்படவில்லை. இது தொடர்பான விளக்கத்தை எந்த காவல் துறை அதிகாரியிடம் அளிக்க வேண்டும் என்பது கூட எனக்கு தெரியாது.
என்னுடைய வாழ்நாளில் இதுவரை காவல் துறையிடம் இருந்து போனில் கூட அழைப்பு வந்தது கிடையாது. அவ்வாறு இருக்க ஒரு செய்தியை வெளியிடுவதற்கு முன்பாக அந்த தகவலின் உண்மை தன்மை என்ன என்பது பற்றி ஆராய்ந்து தெரிந்து புரிந்து பின்னர் பதிவிட வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.