லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை தொடர்பாக கூலாகப் பேட்டியளித்த முன்னாள் அமைச்சர்!

0
125

தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்காலத்தில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர் விஜயபாஸ்கர், அவர் அப்போது நடந்து கொண்ட விதம் பொதுமக்களிடையே அவரை மிகப்பெரிய பிரபலமாக்கியது. சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சமயத்தில் அவர் செயல்பட்ட விதத்தால் பொதுமக்களிடையே அவர் மிகப்பெரிய பிரபலமாக மாறிப்போனார்.

அவரின் இந்த திடீர் அசுர வளர்ச்சி அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கே இடையூறாக வந்து நின்றது எனச் சொன்னால் அது மிகையாகாது. இதன் காரணமாகம், அவர் தன்னுடைய துறை பணிகளில் இருந்த கூட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் சற்றே தள்ளி வைக்கப் பட்டார் அந்த சமயத்தில் சுகாதார பணிகள் அனைத்தையும் அப்போது சுகாதாரத் துறைச் செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் தான் கவனித்துக் கொண்டார். இது விஜயபாஸ்கர் அவர்களுக்கு வருத்தத்தை அளித்தது.

இந்த நிலையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடுகள், கல்லூரிகள், குவாரி மற்றும் அவருடைய உறவினர்கள், நண்பர்கள், போன்றோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை 20 துணை கண்காணிப்பாளர் தலைமையில் 150க்கும் அதிகமான காவல்துறையினர் 30 குழுக்களாக பிரிந்து நேற்றையதினம் சோதனை நடத்தி உள்ளார்கள். இந்த சோதனையில் 23.80 இரண்டு லட்சம் பணம் கைப்பற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதாவது 4.87 கிலோ தங்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் விஜயபாஸ்கர் புதுக்கோட்டையில் பத்திரிகையாளர்களை சந்தித்து இருக்கிறார். அந்த சமயத்தில் அவர் தெரிவித்ததாவது, இந்த சோதனையை சட்டரீதியாக நான் சந்திப்பேன் எனக்கு சொந்தமான வீட்டில் எந்த ஆவணமும் கைப்பற்றப்படவில்லை என தெரிவித்ததோடு, பொது வாழ்க்கையில் நான் இரவு பகல் பாராமல் கடினமாக உழைத்து வருகிறேன், ஆனால் பொது மக்கள் இடையே அவப்பெயரை ஏற்படுத்தும் விதத்தில் எனக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடந்து வருகிறது. அதிமுகவிற்கு சோதனை என்பது புதிது கிடையாது இதனை சட்டரீதியாக நான் எதிர் கொள்வேன் என்று தெரிவித்து இருக்கிறார். அதோடு பொதுவாழ்க்கையில் பயணம் செய்வோருக்கு இது போன்ற இடையூறுகள் நடப்பது வழக்கம் தான் இதை சந்திக்க நான் தயாராக இருக்கிறேன் என்று விஜயபாஸ்கர் கூறியிருக்கிறார்.

Previous articleகல்யாணராமன் கைது விவகாரம்! தமிழக அரசை மிரட்டிய பாஜக தலைமை!
Next articleதேர்வு முறையை மாற்றிய சிபிஎஸ்சி நிர்வாகம்!