பள்ளிகளை திறக்க இதையெல்லாம் செய்ய வேண்டும்! சுகாதாரத் துறை சொன்ன செய்தி!

0
149
All this must be done to open schools! News from the health department!
All this must be done to open schools! News from the health department!

பள்ளிகளை திறக்க இதையெல்லாம் செய்ய வேண்டும்! சுகாதாரத் துறை சொன்ன செய்தி!

தற்போது பள்ளிகள் திறக்க அரசு ஆலோசித்து வருவதோடு, திட்டமிடவும் செய்கிறது. இந்த நிலையில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து சுகாதாரத்துறை சார்பில் நேற்று ஒரு விளக்கம் வெளியிடப்பட்டது. அதில் முதலில் பள்ளி ஆசிரியர்கள் உட்பட அனைத்து பணியாளர்களும் நூறு சதவிகிதம் தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதனை தொடர்ந்து சுகாதாரத்துறை சார்பில் ஏற்கனவே வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் உடன் சில தகவல்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளது. தற்போது திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதில் பள்ளி விடுதியில் பணிபுரியும் பணியாளர்கள், உணவுகளை சமைக்கும் போதும், பரிமாறும்போது முகக்கவசம் அணிய வேண்டும். அதோடு கைகளையும் சானிடைசர் கொண்டு முறையாகவும், கண்டிப்பாக சுத்தமும் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது.

மேலும் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், விடுதி ஊழியர்கள் என அனைவரும் நூறு சதவிகிதம் தடுப்பூசி போடப்பட்டது உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளின் படி தற்போது வரை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்தான் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அந்த வகையில் பார்க்கும் போது பள்ளி மாணவர்களில் பெரும்பாலானோர் 18 வயதை இன்னும் பூர்த்தி செய்யவில்லை.

அப்படி இருக்கும்போது சுகாதாரத் துறையின் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் எப்படி சாத்தியமாகும் என்று கல்வியாளர்கள் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது தொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு இன்னும் தடுப்பூசி போட தொடங்கவில்லை என்றும், இந்த வழிகாட்டு நெறிமுறைகள் சுகாதாரத் துறை சார்ந்து வெளியிடப்பட்டு இருக்கிறது என்றும் தெரிவித்தனர்.

பள்ளிகள் திறப்பு குறித்து எதிர்காலத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் ஆக இதை எடுத்துக்கொள்ளலாம் என்றும் கூறினார். தற்போது பள்ளிகள் திறக்கப்படும் போது மாணவர்களுக்கு நூறு சதவிகிதம் தடுப்பூசி என்பது கட்டாயம் என்பது இல்லை. ஆனால் தகுதியான மாணவர்கள் அதாவது 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் போட்டுக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளனர்.

Previous articleகொரோனாவின் கோரபிடியினால் பாதிப்படைந்த குடும்பம்! அதனால் ஏற்பட்ட விபரீத முடிவு!
Next articleஓடிடி தளத்தில் வெளியாகும் அடுத்த பெரிய திரைப்படம்! ரசிகர்கள் மகிழ்ச்சி!