கொரோனாவின் கோரபிடியினால் பாதிப்படைந்த குடும்பம்! அதனால் ஏற்பட்ட விபரீத முடிவு!

0
89
Family affected by Corona's claim! What a tragic result!
Family affected by Corona's claim! What a tragic result!

கொரோனாவின் கோரபிடியினால் பாதிப்படைந்த குடும்பம்! அதனால் ஏற்பட்ட விபரீத முடிவு!

ஆந்திர மாநிலத்தில், கர்னூல் மாவட்டம், கோல்யகுந்தலா நகரை சேர்ந்தவர் கர்நிதி சுப்ரமணியம் 33 வயதான இவர் மற்றும் அவரது மனைவி ரோஷ்னி 27 வயதான இருவரும் கணவன் மனைவி ஆவர். இந்த தம்பதியருக்கு கோல்யகுந்தலா நகரில் தனியார் ஆங்கில வழி பள்ளிக்கூடம் ஒன்றை நடத்தி வருகின்றனர். சுப்ரமணியம் அந்த பள்ளியின் தாளாளராகவும், அவரது மனைவி அதே பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தனர்.

இதை தொடர்ந்து பள்ளியின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுப்ரமணியம் வங்கி மற்றும் தனியார் நிதி நிறுவனத்திடம் இருந்து இரண்டு கோடி ரூபாய் வரை கடன் பெற்றுள்ளார். ஆனால் கொரோனா தாக்கத்தின் காரணமாக பள்ளிகள் நடைபெறவில்லை. மேலும் கொரோனா காலகட்டம் என்பதால் பள்ளியில் கட்டணம் வசூலிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டது.

இதனால் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவதிலும், கடனுக்கு வட்டி செலுத்துவதிலும் கடந்த சில மாதங்களாக பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் அவர்கள் இருவரும் மிகுந்த  நிதிச்சுமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாக கடுமையான கடன் சுமையால் மிகுந்த கவலையிலும் இந்த தம்பதியினர் இருந்துள்ளனர். அதனை தொடர்ந்து அவர்கள் விபரீத முடிவு எடுக்க துணிந்துள்ளனர்.

எனவே கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு விஷ மாத்திரைகளை உண்டு தற்கொலையும் செய்து கொண்டுள்ளனர். தற்கொலை செய்வதற்கு முன்னதாக இருவரும் வீடியோ ஒன்றை எடுத்து அதை தங்கள் உறவினர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தற்கொலை செய்து கொண்ட தம்பதிகள் உடலை கைப்பற்றிய போலீசார், இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கடன் சுமையால் பள்ளி தாளாளர் மற்றும் ஆசிரியையான அவரது மனைவி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனாவின் தாக்கம் நாட்டில் பல மக்களின் வாழ்வாதாரத்தை பாதித்து தான் உள்ளது. ஆனால் அதற்கு தற்கொலை தீர்வாகாது அல்லவா. படித்த நபர்களே இப்படி ஒரு தவறு செய்யும் போது படிக்காத பாமர மக்கள் என்ன செய்வார்கள் சொல்லுங்கள். நாட்டு மக்களின் கஷ்டங்களை போக்க அரசாங்கம் ஏதாவது துணை புரிய வலியுருத்துவோம்.