Breaking News

ஆருத்ரா விவகாரம்: தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மீது குற்றச்சாட்டு!

ஆருத்ரா விவகாரம் குறித்து தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மீது தி.மு.க. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குற்றச்சாட்டு தெரிவித்தார்.

ஆர்.எஸ்.பாரதிக்கு அண்ணாமலை சார்பில் வழக்கறிஞர் ஆர்.சி.பால் கனகராஜ் நோட்டீஸ் விடுத்தார்.

இந்த விவகாரத்தில் ஆர்.எஸ்.பாரதி உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.

இல்லையென்றால் ரூ.500 கோடி வழங்க வேண்டும் என அண்ணாமலை தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார்.

இல்லையென்றால் ஆர்.எஸ்.பாரதி மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என அண்ணாமலை தரப்பில் விளக்கம் அளித்துள்ளனர்.