சினிமாவில் அரசியல் நடப்பதாக குற்றச்சாட்டு!! உண்மையை உடைத்த நடிகை!! 

0
116
Allegation of politics in cinema!! The actress who broke the truth!!
Allegation of politics in cinema!! The actress who broke the truth!!Allegation of politics in cinema!! The actress who broke the truth!!

சினிமாவில் அரசியல் நடப்பதாக குற்றச்சாட்டு!! உண்மையை உடைத்த நடிகை!!

ஐஸ்வர்யா ராஜேஷ் இவர் இந்த நடிகையாக உள்ளார். இவர் மலையாளம் , தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் பணியாற்றி வருகிறார். இவர் சிறந்த நடிப்பிற்காக 4 தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் மற்றும் மாநில விருதுகள் பெற்றுள்ளார். இவர் முதலில் தொலைகாட்சி நிகழ்ச்சியின் தொகுப்பாளராக தொடங்கினார்.

அதனையடுத்து இவர் 2011 ஆம் ஆண்டு அவர்களும் இவர்களும் படத்தில் அறிமுகமானர். அதன் பின் 2012  ஆம் ஆண்டு வெளிவந்த அட்டகத்தி படத்தின் மூலம் முக்கியத்துவம் பெற்றார். அதனையடுத்து காக்கா முட்டை, வாடா சென்னை, கானா, ரம்மி, நம்ப வீட்டு பிள்ளை, பண்ணையாரும் பத்மினியும், தர்ம துறை போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

இவர் சமீப காலமாக எந்த நடியாக்ர்களுடன் சேராமல் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் மட்டும் நடித்து வருகிறார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் இந்த மாற்றம் வர காரணம் என்று ஒரு கேட்ட போது தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி, தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட ஒரு சில ஹீரோக்கள் மட்டும் வாய்ப்பு கொடுத்துள்ளார்கள். மற்ற நடிகர்கள் இவரை புறக்கணிப்பதாக குற்றம் சாட்டினார்.

மேலும் சில தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுடன் கூடன் இவரை ஒதுக்குவதாகவும் தெரிவித்துள்ளார்கள். இது மட்டுமின்றி பெரிய பட்ஜெட் படங்கள் மற்றும் பெரிய ஹீரோக்களின் படங்களிலும் தனது பெயர் இருந்தால் கூட உடனே தூக்கி விடுவார்கள் என்று வேதனை தெரிவித்தார். தனக்கு பதிலாக வேற ஸ்டேட் ஹீரோயினுக்கு முக்கியதத்துவம் கொடுப்பவர்கள் என்றும் தெரிவித்தார்.

இந்த சூழலில் தான் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய பட வாய்ப்புகள் மட்டும் தேடி வருகிறது என்று தெரிவித்தார். மேலும் சினிமாவில் இருக்கும் அரசியல் தான் இதற்கு காரணம் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

Previous articleவிமான நிலையத்தில் ரசிகருடன் நடனம் ஆடிய தமன்னா!! இணையத்தில் வீடியோ வைரல்!!
Next articleபொறியியல் மாணவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!! பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங் தேதி அறிவிப்பு!!