மீண்டும் கூட்டணி! மகிழ்ச்சியின் உச்சத்தில் தளபதி ரசிகர்கள்!

Photo of author

By Parthipan K

நடிகர் விஜய் அவர்களை வைத்து முதல்வன் 2 திரைப்படத்தை இயக்க இயக்குனர்ஷங்கர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் மிக பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயரைப் பெற்றவர் இயக்குனர் ஷங்கர். அதிக அளவில் அவர் கொடுத்த வெற்றிப் படங்களில் ரஜினி கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து அவர் இயக்கியது தான் அதிகம். எனவே முன்னணி நடிகர்களை வைத்து இயக்குவதில் பல சிக்கல்களை அவர் சந்திப்பதாகவும் உதாரணமாக ரஜினிக்கு வயதாகி விட்டதால் அவரால் அதிக அளவு முயற்சி செய்து படங்களில் நடிக்க முடியாது என்றும், நடிகர் கமல் நடிக்கும் படங்களில் அடிக்கடி படப்பிடிப்பு நின்று  போவதாலும் பல சிரமங்களை சந்திப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆகையால் இவர்கள் இருவரையும் விட்டுவிட்டு அடுத்த தலைமுறையான தளபதி விஜய் உள்ளிட்டோர் உடன் கூட்டணி அமைக்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார். அதேபோல் இந்தியன்2 படப்பிடிப்பு திரைப்படம் முடிவடைந்தபின் முதல்வன்2 திரைப்படத்தை இயக்க உள்ளதாகவும் இதில் தளபதி விஜய் நடிக்க ஏராளமான வாய்ப்புகள் இருப்பதாகவும் இயக்குனர் சங்கரின் வட்டாரங்கள் அதிகமாக தெரிவித்து வருகின்றனர்.