அதிமுக மற்றும் பாஜக இடையே கூட்டணி தொடர்கிறது – இபிஎஸ் அறிவிப்பு

Photo of author

By Parthipan K

அதிமுக மற்றும் பாஜக இடையே கூட்டணி தொடர்கிறது – இபிஎஸ் அறிவிப்பு

நேற்று டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அஇஅதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி அவர்கள் சந்தித்துப் பேசினார்.

அப்போது  எடப்பாடி பழனிசாமி அவர்கள் கூறும்போது, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் எங்களுக்கும் எந்த கருத்து வேறுபடும் இல்லை அஇஅதிமுக – பாஜக கூட்டணி தொடர்கிறது என்று கூறியுள்ளார்.

எல்லாவற்றையும் கேட்டுகொண்டு இருப்பதற்கு அதிமுக ஒன்றும் அடிமை கட்சி இல்லை, அதிமுகவும் இரட்டை இலையும் எங்கள் பக்கம்தான் என்று கூறினர்.

திமுக நிதி அமைச்சர் பிடிஅர் பழனிவேல் தியாகராஜன்  பேசியதாக சொல்லப்படும் ஆடியோ குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் விவாதித்ததாக தெரிகிறது.  மேலும் ஆடியோ விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கூறியுள்ளார் .

திமுக நிதி அமைச்சர் பிடிஅர் பழனிவேல் தியாகராஜன்  பேசியதாக சொல்லப்படும் ஆடியோ விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மவுனம் சாதிப்பது வியப்பாக உள்ளது.

அதிமுக ஆட்சியில் டெண்டர் ஒதுக்கீடுடில் எந்த ஒரு ஊழலும் நடைபெறவில்லை என்று சிஏஜி அறிக்கையில் குறிப்பிடவில்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும் கொடநாடு கொலை கொள்ளை தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் அஇஅதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி அவர்கள் விவாதித்ததாகவும் கூறப்படுகிறது.