தேமுதிக திமுக-வுடன் கூட்டணியா? தொண்டர்களுக்கு பாராட்டு மூலம் க்ளூ கொடுத்த பிரேமலதா விஜயகாந்த்!

தேமுதிக திமுக-வுடன் கூட்டணியா? தொண்டர்களுக்கு பாராட்டு மூலம் க்ளூ கொடுத்த பிரேமலதா விஜயகாந்த்!

சமீப காலமாக தேமுதிக கட்சி பற்றி எந்த ஒரு தகவல்களும் காணப்படவில்லை. தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு சில வருடங்களாகவே உடல் உடல்நிலையில் குறைபாடு இருந்து வருகிறது. தொண்டர்களிடம் பேச கூட முடியாத அளவிற்கு விஜயகாந்தின் உடல்நிலை தற்போது உள்ளது. மேலும் கழகப் பணி என அனைத்திலும் தேமுதிகவின் கழகப் பொருளாளர் ஆன பிரேமலதா விஜயகாந்த் தான் முன்னின்று நடத்தி வருகிறார்.

அந்த வகையில் பல நாட்கள் கழித்து பிரேமலதா விஜயகாந்த் சென்னையில் நடைபெற்ற ஓர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். கலந்துகொண்டு மணமகன் மற்றும் மணமகளை வாழ்த்தினார். பின்பு அங்கிருந்து நிரூபர்களிடம் பேட்டி அளித்தார். அதில், தற்பொழுது பெய்து வரும் பருவமழை குறித்து தமிழக அரசு சிறப்பாக செயல்படுவதாக தெரிவித்தார்.தேமுதிகவிற்கு கட்சித் தொண்டர்கள் தான் ஆணிவேர் என்று புகழாரம் கூறி பேசினார்.

அப்போதைய காலகட்டத்தில் இருந்து இப்பொழுது வரை அனைவருக்கும் பிடித்த தலைவர்களில் ஒருவர்தான் எம்ஜிஆர். எம்ஜி ஆருக்கு அடுத்து பிடித்த தலைவர்களில் ஒருவர் யார் என்று கேட்டால் விஜயகாந்த்தான் என கூறினார். அதேபோல தற்பொழுது, சென்னையில் மழை நீர் வடிகால் பணிகள் தமிழக அரசு வாயிலாக சிறப்பாக நடைபெற்று வருகிறது எனக் கூறி அதற்கான பாராட்டுகளையும் தெரிவித்தார்.

பல கட்சிகள் சென்னையில் வடிகால் பணிகள் தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை என்று குற்றம் சாட்டி வருகையில், தேமுதிக பிரேமலதா மட்டும் பாராட்டை தெரிவித்து இருப்பது சற்று குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.அதுமட்டுமின்றி உதயநிதி, விஜயகாந்தை சில நாட்கள் முன் நேரில் சென்று பார்த்தது இதற்காக தான எனவும் பேசி வருகின்றனர்.

வரும் காலங்களில் இவர்கள் திமுகவுடன் கைகோர்க்க போகிறார்களா என்றும் தேமுதிக சுற்றுவட்டாரங்கள் பேச ஆரம்பித்துள்ளது. இறுதியில் தற்பொழுது பெய்து வரும் பருவமழையால் பல மக்கள் அன்றாட வாழ்க்கை நடத்த முடியாமல் சிக்கலில் உள்ளனர் அவ்வாறு உள்ளவர்களுக்கு நமது கழகத் தொண்டர்கள் உதவி புரிய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். வெகு நாட்கள் கழித்து பிரேமலதா விஜயகாந்த் இவ்வாறு பேசியது கட்சி தொண்டர்களுக்கு புத்துணர்ச்சி அளித்துள்ளது.

Leave a Comment