DMDK ADMK: அதிமுக எம்பி தேர்தலில் தேமுதிகவிற்கு சீட் வழங்க வில்லை. ஆனால் அதிமுக தேமுதிக விற்கு சீட் வழங்குவோம் என்று ஒப்புதல் அளித்ததாக பிரேமலதா கூறியிருந்தார். அதிமுக அதற்கு முழு மறுப்பு தெரிவித்தது. விஜயகாந்த் போல தனது மகனையும் எம்பி சீட் வாங்கி பதவியில் உட்கார வைத்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் பிரேமலதா தீவிரமாக இருந்தார். ஆனால் அவரது அரசியல் கணக்கெல்லாம் அதிமுகவால் தகிடுபொடி ஆகிவிட்டது.
இதனால் ஜனவரி மாதம் நடக்கும் மாநாட்டை அடுத்து தங்களது கூட்டணி குறித்து அறிவிப்போம் என தேமுதிக கூறிவிட்டனர். இவர்களை கைநழுவ விட்டு விடக்கூடாது என்பதற்காக அதிமுகவும் அடுத்த ஆண்டு கட்டாயம் எம்பி தேர்தலில் சீட் வழங்குவதாகவும் கூறிவிட்டது. அவ்வபோது பிரேமலதா மற்றும் அவரது மகன்களிடம் செய்தியாளர்கள் பேட்டி எடுக்கையில் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அந்த வகையில் விஜய் பிரபாகரனிடம் கேட்டபோது, எங்களுக்கு திமுக அதிமுகவுடன் கூட்டணி வைப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. திராவிட கொள்கை மற்றும் சிந்தனை இருக்கும் கட்சியில் கட்டாயம் கூட்டணி வைப்போம் என தெரிவித்துவிட்டார். இவர் கூறுவதை வைத்து பார்க்கையில் நடக்கப்போகும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கைகோர்க்க அதிக வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். இதனால் அதிமுகவிற்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தும்.
முன்னதாக பாமக அதிமுக வை விட்டு விலகியது போல தற்போது தேமுதிக வும் கட்சியை விட்டு நீங்க தயாராகி விட்டது என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.