பிரேமலதாவின் புது கணக்கு! அதிமுகவை மிரள விடும் தேமுதிக!

0
116

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நெருங்கி வந்து கொண்டிருக்கும் நேரத்தில் அதிமுக கூட்டணியில் இருக்கின்றார் விஜயகாந்த் கட்சியான தேமுதிக கூட்டணி கட்சிகளையும் அதிமுகவையும் ஆட்டம் காண வைத்து இருக்கிறது. நாங்கள் தனித்து நிற்கிறோம், மூன்றாவது அணியை எங்கள் தலைமையில் அமைக்க போகின்றோம், என்று தெரிவித்து வருகிறார் அந்த கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இவ்வாறு ஒரு புறம் பேசிக்கொண்டே, மறுபுறம் நாங்கள் அதிமுகவின் கூட்டணியில் இருக்கிறோம் என்று தெரிவித்து வருகிறார் அதோடு சுமார் 41 தொகுதிகளை ஒதுக்கி தரும் கட்சியோடு தான் நாங்கள் கூட்டணி வைக்கப் போகிறோம் என்றும் அந்த கட்சிசொல்கிறது .

அந்த கட்சியின் சட்டசபை தேர்தல் ஆலோசனைக் கூட்டம் ஈரோட்டில் நடந்தது. அந்த கூட்டத்தில் திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் பார்த்தசாரதி கலந்து கொண்டார் .அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் மூன்றாவது அணி அமைவதற்கான வாய்ப்பே கிடையாது. அதிமுக கூட்டணியில் கடந்த 2011ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் எங்கள் கட்சிக்கு 41 தொகுதிகள் கொடுக்கப்பட்டன. இந்த வருடமும் அதே 41 தொகுதிகளை கேட்க இருக்கிறோம் என்று தெரிவித்தார். அதோடு நாங்கள் கேட்கும் இடத்தை கொடுப்பவர்கள் உடன் எங்களுடைய கூட்டணி அமையும் நாங்கள் தனியாக போட்டியிடுவது தொடர்பாக பொதுக்குழு கூட்டத்திற்கு பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

எதிர்வரும் சட்டசபைத் தேர்தலில் அதிகமான இடங்களை கொடுக்கும் கட்சிகளுடன் தான் எங்களுடைய கூட்டணி அமையும் என்று பொதுக்குழுவிற்கு பிறகு அறிவிக்கப்படும். கூட்டணியில் இருப்பதால் தேர்தல் அறிக்கை தயார் செய்யப்படவில்லை என்று தெரிவித்திருக்கிறார் பார்த்தசாரதி.

முதலமைச்சர் ஜெயலலிதா இருந்த பொழுதே 41 தொகுதிகள் ஒதுக்கியதை மனதில் வைத்து இப்பொழுதும் 41 தொகுதிகள் கொடுக்க வேண்டும் என்று அந்த கட்சி எதிர்பார்க்கிறது. ஆனால் அந்தக் கட்சி 2011 ஆம் ஆண்டு இருந்த நிலை வேறு, இப்போது இருக்கும் நிலை வேறு, அப்போது அந்த கட்சிக்கு நல்ல வாக்கு வங்கி தமிழகத்தில் இருந்து வந்தது. அதனை மனதில் வைத்து ஜெயலலிதா அந்த கட்சி கேட்கும் தொகுதிகளை ஒதுக்கிக் கொடுத்தார். ஆனால் தற்சமயம் அந்த கட்சியின் நிலையே பரிதாபமாக இருக்கிறது. வாக்கு வங்கியும் அகல பாதாளத்திற்கு சென்றுவிட்டது. இப்பொழுதும் அதே தொகுதிகளை கேட்பது அதிமுகவை சற்று முகம் சுளிக்க வைத்திருப்பதாக சொல்கிறார்கள்.

தேமுதிக வெளியில் என்ன என்ன பேசினாலும் சரி முதல்வரின் குறிக்கோள் வேறாகத்தான் இருக்கும் என்று சொல்கிறார்கள். தமிழகத்தில் சொற்ப வாக்கு வங்கி வைத்திருக்கும் ஒரு கட்சிக்கு 41 தொகுதிகள் என்பது மிக மிக அதிகம். அவ்வாறு ஒதுக்கீடு செய்தால் அது அதிமுகவை மிகமிக பாதிக்கும் என்று சொல்கிறார்கள்.

அதன் காரணமாக, இந்த விஷயத்தில் அதிமுக எடுக்கும் முடிவே இறுதி முடிவாக இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.

Previous articleபேரறிவாளன் விடுதலை தொடர்பாக முடிவெடுக்க ஆளுநருக்கு அவகாசம் கொடுத்த உச்சநீதிமன்றம்!
Next articleஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்த இந்திய வம்சாவளியைச் சார்ந்த இரு அதிகாரிகள் நீக்கம்! ஜோ பைடன் அதிரடி நடவடிக்கை!