அதிமுக தொண்டர்களுக்கு இன்று முதல் அனுமதி! பலத்த போலீஸ் பாதுகாப்பு!
அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த மாதம் 11ஆம் தேதி வானகரத்தில் நடைபெற்றது. அதனையடுத்து ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் ஓ பன்னீர் செல்வம் , எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதலில் பலர் காயமடைந்தனர். அதிமுக அலுவலகம் முழுவதும் சேதப்படுத்தப்பட்டது. அதனையடுத்து அதிமுக அலுவலகத்துக்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்.
மேலும் இது தொடர்பான வழக்கில் அதிமுக அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் வன்முறையை தவிர்க்க கடந்த 21 முதல் ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை அதிமுக அலுவலகத்தில் தொண்டர்களை அனுமதிக்க கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் நீதிமன்றத்தின் கெடு நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில் அதிமுக தொண்டர்கள் இன்று முதல் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதிமுகவினர் இப்போதும் ஓபிஎஸ் ,இபிஎஸ் தலைமையில் இரு அணியாக செயல்பட்டு வருகின்றனர். இரு அணியினரும் அதிமுக அலுவலகத்திற்கு வரும்போது மோதல் ஏற்படுமா என்கிற சந்தேகம் இருந்து வருகிறது . இந்நிலையில் அதிமுக அலுவலகத்தில் இரு காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 35 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.