அமாவாசையை முன்னிட்டு நான்கு நாட்கள் இந்த கோவிலுக்கு செல்ல அனுமதி!! வனத்துறை அறிவிப்பு!!
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி அருகில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் புகழ்பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பௌர்ணமி, மற்றும் பிரதோஷ நாட்களில் பக்தர்கள் மலையில் உள்ள லிங்கத்தை தரிசிக்க செல்வது வழக்கம். இது மலை பகுதியில் அமைந்து உள்ளதால் மேலே செல்ல வனத்துறை அனுமதி கட்டாயம் பெற வேண்டும்.
அதேபோல இந்த மாதம் ஆனி மாத பிரதோசம் மற்றும் ஆடி அமாவாசை வர இருப்பதால் பக்தர்கள் மலை கோவிலுக்கு செல்ல வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி நாளை 15-7-2023 முதல்18-07-2023 வரை சிறப்பு வழிபாட்டிற்காக 4 நாட்களுக்கு மலை மேல் ஏறி சென்று வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் காலை 7 மணி முதல் நண்பகல் 12 வரை பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப் பட்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
மேலும் பக்தர்கள் மலைமேல் தங்குவதற்கு அனுமதி இல்லை. எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி இல்லை. இந்த 4 நாட்களில் மழை வந்தால் அனுமதி மறுக்கப்படும். வழியில் தென்படும் மலை ஆறுகளில் பக்தர்கள் குளிக்க கூடாது. போன்ற கட்டுப்பாடுகளுடன் வனத்துறை அனுமதி அளித்துள்ளது.