500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ராமாயணம் படமாக்கப்படுவது உறுதி… பிரபல நடிகர் தகவல்!

0
278

500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ராமாயணம் படமாக்கப்படுவது உறுதி… பிரபல நடிகர் தகவல்!

ராமாயணத்தைப் படமாக உருவாக்க உள்ளதாக சில ஆண்டுகளுக்கு முன்னர் அல்லு அர்ஜுன் அறிவித்திருந்தார்.

பாகுபலி படங்களுக்குப் பிறகு இப்போது புராண கால கதைகளை எடுப்பதில் இந்திய சினிமாவினர் ஆர்வம் காட்டி வருகின்றனர். சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது இதற்கு ஒரு சான்றாகும். அதுபோல இப்போது பிரபாஸ் நடிப்பில் அதிபுருஷ் திரைப்படமும் உருவாகி வருகிறது.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் ராமாயணத்தை 500 கோடி ரூபாய் செலவில் படமாக்க உள்ளதாக நடிகர் அல்லு அர்ஜுன் தெரிவித்திருந்தார். ஆனால் அதன் பின்னர் எந்தவொரு தகவலும் அதுபற்றி வெளியாகவில்லை. இந்நிலையில் இப்போது அதுபற்றி பேசியுள்ள அவர் “ராமாயணம் படத்தின் வேலைகள் நிற்கவில்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முன் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. இன்னும் 6 மாதத்துக்குள் எல்லா பணிகளும் நிறைவடைந்து ஷூட்டிங் செல்லும் பணிகள் தொடங்கும். முன்பு 500 கோடி ரூபாய் பட்ஜெட் போட்டிருந்தோம். இப்போது இன்னும் அது அதிகமாகி இருக்கும்” எனக் கூறியுள்ளார்.

இப்போது அல்லு அர்ஜுன் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் கவனம் செலுத்தி வருகிறார். முதல் பாகம் வெளியாகி கிட்டத்தட்ட 10 மாதங்கள் ஆகியும் இரண்டாம் பாகம் தொடங்கப்படவில்லை. முதல் பாகத்தின் எதிர்பாராத வெற்றியால் இரண்டாம் பாகத்தில் பல மாற்றங்களை இயக்குனர் சுகுமார் செய்து வருவதாக சொல்லப்பட்டது. அதையடுத்து படத்தின் கதையை சர்வதேச நாடுகளில் நடப்பது போல மாற்றியுள்ளனர் என்று சொல்லப்படுகிறது.

Previous articleஉதயநிதி ஸ்டாலினின் அடுத்த ரிலீஸ் ‘கலகத் தலைவன்’… டீசர் ரிலீஸ் அப்டேட்!
Next articleமீண்டும் இயக்குனர் ஆகும் எஸ் ஜே சூர்யா… 50 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பேன் இந்தியா திரைப்படம்!