Almond Oil: உங்கள் முகம் பளபளக்க..! இந்த எண்ணெயை உங்கள் முகத்தில் தடவுங்கள்..!

0
138
almond-oil
#image_title

Almond Oil: தற்போது அனவரும் தங்களின் முகத்தை பாராமரிக்க பியூட்டி பார்லர் போன்ற அழகு நிலையங்களுக்கு சென்று அதிக அளவில் பணம் செலவழித்து பாராமரித்து கொள்கிறார்கள். ஒரு சிலர் இளமையாக இருக்கும் போதே அவர்களின் முகத்தில் சுருக்கங்கள் விழுந்து பார்பதற்கே வயதான தோற்றத்தில் காணப்படுவார்கள்.

அனைவருக்கும் தங்களின் முகம் பார்ப்பதற்கு பளபளப்பாகவும், மென்மையாகவும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அதற்காக வெளியில் விற்கப்படும் அழகு சாதனப்பொருட்களை வாங்கி வந்து உபயோகப்படுத்துவார்கள். ஆனால் அதனை பயன்படுத்துவதன் மூலம் குறிப்பிட்ட நாட்கள் வரை அழகாகவும், பிறகு தோல் சுருங்கி வயதான தோற்றத்தை உண்டாக்கும். எனவே இயற்கையான பொருட்களை பயன்படுத்தினால் நம் முகத்திற்கு எந்த வித பக்க விளைவுகளும் வராது.

பாதம் எண்ணெய் – Almond Oil

காலையில் 2 ஊறவைத்த பாதம் (Badam Oil benefits in tamil) சாப்பிட்டு வந்தால் உடல்நலத்திற்கு நல்லது என்று கூறுவார்கள். இந்த பாதம் எண்ணெயை எடுத்துக்கொண்டால் இது அதிக அளவு அழகு சாதனப்பொருட்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அது முழு பாதாமை ஒப்பிடும் பொழுது, பாதம் எண்ணெய் குறைந்த ஊட்டச்சத்து தான் உள்ளது. ஆனால் இதனை நாம் முடி வளர்ச்சிக்கும், முகப்பொழிவுக்கும் பயன்படுத்தி வந்தால் கூடுதல் நன்மை பெறலாம். ஏனெனில் பாதம் எண்ணெயில் வைட்டமின் ஈ. மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் பைட்டோஸ்டெரால்கள் உள்ளன. இதனால் இந்த பாதம் எண்ணெய்யை நாம் உபயோகப்படுத்தும் அழகு சாதனப்பொருட்களில் பயன்படுத்துகின்றன.

இந்த எண்ணெயை சறிதளவு எடுத்து முகத்தில் தடவ வேண்டும். எண்ணெய்யை முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். முதலில் பயன்படுத்துவர்கள் அவர்களின் முகத்தில் இந்த எண்ணெய் ஏற்றுக்கொள்கிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள்.

கருவளையம் உள்ளவர்கள் இரவில் உறங்குவதற்கு முன்பாக பாதம் எண்ணெயை கண்களுக்கு அடியில் தடவி வந்தால் கருவளையம் மறைந்துவிடும்.

பயன்கள் 

பாதம் எண்ணெயில் வைட்டமின் ஈ உள்ளதால் இது உங்கள் சருமத்தில் உள்ள பருக்களை குறைய செய்யும். மேலும் பளபளப்பான, மென்மையான பொலிவை கொடுக்கும்.

இந்த எண்ணெய் சூரிய ஒளியில் இருந்து உங்கள் முகத்தை பாதுகாக்கும். மேலும் இந்த எண்ணெய் ஈரப்பதமாக இருப்பதால் வறண்ட முகத்திற்கு இது கூடுதல் பலனளிக்கும். இதனை நீங்கள் மாய்ஸ்சரைசராகவும் பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க:  ABC Juice குடிப்பவரா நீங்கள்.. இதை தெரிஞ்சிக்காம குடிக்காதீங்க..!

Previous articleமுருகனின் பாதம் காண இங்கு வாருங்கள்..ஞான மலையில் இருக்கும் முருகப்பெருமான்..!
Next articleசாப்பிட உடனே புளித்த ஏப்பம் வருகிறதா? இதை கண்ட்ரோல் செய்ய உதவும் பெஸ்ட் டிப்ஸ் இதோ!!