பா.ஜ.கா வில் இணைந்த மாற்று கட்சியினர்! உறுப்பினர்களை இழக்கும் இதர கட்சிகள்!
இந்தியாவில் இரண்டு பெரிய கட்சிகள் உள்ளது அதில் பா.ஜ.க என்பதும் ஒன்றாகும்.பா.ஜ.க கட்சியானது 1980 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பல்வேறு மாநில சட்டமன்றங்களை பெற்றிருக்கும் இடங்களின் அடிப்படையில் இந்தியாவின் முதலாவது பெரிய அரசியல் கட்சியாகத் திகழ்கிறது.
இதை பாரதிய ஜனதா கட்சி அல்லது சுருக்கமாக பாஜக என்றும் கூறலாம். 2013 ஆண்டு டிசம்பர் மாதத்தின் தேர்தல் முடிவுகளின்படி பா.ஜ.க அதிக வாக்குகள் வித்தியசத்தில் வெற்றி பெற்று ஆட்சியில் உள்ளது.
தற்போது தி.மு.க. எம்.பி யின் மகன் பா.ஜ.கா.வில் இணைந்தார்.திருப்பூரில் பிற கட்சி முக்கிய உறுபினர்கள் தங்களை பா.ஜ.காவில் இணைத்துக்கொண்டனர்.
பிறகு அ.தி.மு.கவின் சோழவந்தான் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் மாவட்ட செயலாளர் சோலன் சீ.தா.பழனிச்சாமி, சிவசேனா மாநில தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் தலைமை நிர்வாகிகள், தமிழ்நாடு இளைஞர் கட்சி நிறுவனர் பொதுச்செயலாளர் டி.ராஜசேகர் ஆகியோரும் இணைந்தனர்.
இன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் மல்லாபுரம் கிராமத்தை சேர்ந்த மாற்றுக் கட்சியினர்கள் பலர் தாங்களும் பா.ஜ.காவில் இணைகிறோம் என்று சங்கராபுரம் மேற்கு ஒன்றியம் தலைவர்கள் முன்னிலையில் பா.ஜ.கா வில் இணைந்தனர் .