சரும பிரச்சனைகளை தீர்க்கும் படிகாரக் கல்!! இனி க்ரீம் வேண்டாம்.. இது ஒன்று போதும்!!

0
116

இயற்கையாகவே கிடைக்கும் கனிம உப்பு தான் படிகாரக் கல்.இவை தோற்றத்தில் கற்கண்டு போல் இருக்கும்.இந்த படிகாரக் கல் அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது.படிகாரத்தை பொடியாக்கி முகத்தில் தடவி வந்தால் பல நன்மைகள் கிடைக்கும்.

படிகாரத்தை பொடித்து பேஸ்ட்டாகி முகத்தில் தடவி வந்தால் பருக்கள் பிரச்சனை சரியாகும்.படிகாரத்தில் கிருமி நாசினி பண்புகள் அதிகளவு உள்ளது.இது பருக்கள்,கரும்புள்ளிகள் போன்றவற்றில் உள்ள பாக்டீரியாக்களை அழிக்க உதவுகிறது.

பருக்களால் உண்டாகும் தழும்புகளை மறைய செய்ய படிகாரத் தூளை பயன்படுத்தலாம்.சருமத்தில் உள்ள எண்ணெய் பிசுக்கை உறிஞ்சி சரும பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது.

படிகாரத்தை பொடித்து அக்குள் பகுதியில் பூசினால் வியர்வை வெளியேறுவது கட்டுப்படும்.படிகாரக் கல்லை நீரில் ஊறவைத்து முகத்தில் தடவி பிறகு வெது வெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவினால் சரும பிரச்சனைகள் முழுமையாக நீங்கும்.

சருமத்தில் உள்ள துளைகளை இறுக்கமாக்கும் வேலையை படிகாரம் செய்கிறது.தோல் பராமரிப்பில் படிகாரம் பெரிதும் உதவியாக இருக்கிறது.படிகாரத்தை முகத்திற்கு பயன்படுத்துவதால் ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்.சருமத்தில் காணப்படும் டெட் செல்கள் நீங்க படிகாரத்தை பொடித்து முகத்திற்கு பயன்படுத்தலாம்.

சந்தையில் விற்கும் விலை உயர்ந்த இரசாயனப் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து விட்டு நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் இந்த படிகாரத்தை வாங்கி பயன்படுத்தி வந்தால் இயற்கையான முறையில் சரும ஆரோக்கியம் மேம்படும்.

அடிக்கடி படிகாரத்தை பயன்படுத்தி வந்தால் முகத்தின் நிறத்தில் நல்ல மாற்றம் ஏற்படும்.என்றும் இளைமையாக இருக்க படிகாரத்தை சருமத்திற்கு பயன்படுத்தி வரலாம்.சரும வறட்சி உள்ளவர்கள் அதிக நேரம் படிகாரத்தை சருமத்தில் வைக்க வேண்டாம்.அதேபோல் ஒவ்வாமை பிரச்சனை இருப்பவர்கள் படிகாரம் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

Previous articleகருத்த வெள்ளிப் பொருட்களுக்கு கடையில் வாங்கியது போன்ற பளபளப்பு கிடைக்க இதை ட்ரை பண்ணுங்க!!
Next articleவிளக்கில் உள்ள எண்ணெய் பிசுபிசுப்பு கழண்டு வர.. இந்த பொடியை பயன்படுத்தி க்ளீன் பண்ணுங்க!!