திமுகவுடன் இணையப்போகிறேன்??.. அதிமுக முக்கிய புள்ளி வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

0
411
Am going to join DMK??.. Sudden announcement made by AIADMK main point!!
Am going to join DMK??.. Sudden announcement made by AIADMK main point!!

ADMK: அதிமுக தலைமை இரண்டு அணிகளாக பிரிந்த நிலையில், வாக்கு சதவீதமானது குறைய தொடங்கியது. கிட்டத்தட்ட ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு வரும் தேர்தல் அனைத்திலும் தோல்வியை தான் சந்தித்து வருகின்றனர். அதிலும் ஓபிஎஸ் யின் உரிமை மீட்பு குழு ஒரு பக்கமும், சசிகலாவின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றொரு பக்கமும் அதிமுகவின் கொடி மூன்று திசைகளில் உள்ளது.

இதனிடையே பாஜகவுடன் கை கோர்த்த அதிமுக, மீண்டும் ஓபிஎஸ் சசிகலா உள்ளிட்டவர்ர்களை இணைந்துக் கொள்ளும் என்று எதிர்பார்த்தது. ஆனால் மத்திய அமைச்சரவை வரை பேசியும் எதுவும் எடுபடவில்லை. நான் அவர்களை கட்சியில் சேர்க்க மாட்டேன் என கூறி எடப்பாடி உறுதியாக உள்ளார். இதில் உரிமை மீட்பு குழுவிலிருந்து சமீபத்தில் மனோஜ் பாண்டியன் உட்பட பல முக்கிய புள்ளிகள் திமுகவை தஞ்சம் அடைந்தனர்.

அந்த வரிசையில் ஓபிஎஸ் யின் உரிமை மீட்பு குழுவின் இணைச் செயலாளராக இருக்கும் வைத்தியலிங்கமும் திமுகவிடம் செல்ல உள்ளதாக தகவல்கள் பரவியது. அதுமட்டுமின்றி திமுக இணைத்துக் கொள்ளவில்லை என்றால் கட்டாயம் எடப்பாடி-யிடம் சேர்ந்து கொள்வார் என்றும் பேசப்பட்டது. ஆனால் இவை இரண்டுமே கிடையாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இது ரீதியாக அவர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். குறிப்பாக அதில் அவர், எம்ஜிஆர் அவர்கள் தோற்றுவிக்கப்பட்ட ஜெயலலிதா அவர்களால் கட்டிக்காட்டப்பட்ட அதிமுகவை மீட்டெடுப்பது தான் எனது கடமை எனக் கூறியுள்ளார். இதன்படி இவர் அதிமுக எடப்பாடி உடனும், ஆளும் கட்சி திமுக விடவும் இணைய போவதில்லை என்பது தெரிவருகிறது.

Previous articleநயினார் அதிகாரத்தில் கை வைக்கும் பாஜக தலைமை!! அண்ணாமலை தலைக்கு போகும் கிரீடம்!!
Next articleதவெகவை இழிவாக பேசிய நயினார் நாகேந்திரன்.. இட்ஸ் வெரி ராங் புரோ!! டென்ஷன் ஆன விஜய்!!