பிகினி உடையில் அமலா பால்… வைரலாகும் புகைப்படம்!

Photo of author

By Parthipan K

சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமான அமலா பால்,தற்போது கோலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.சிந்து சமவெளி படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தரவில்லை.

அதன்பின் பட வாய்ப்புகளுக்காக காத்துக் கொண்டிருந்த இவருக்கு “அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்டர” என்பதைப்போல் மைனா படம் மாறியது.இப்படத்தின் மூலம் இவரின் நடிப்பை பலரும் பாராட்ட தொடங்கினர்.

பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தனது மார்க்கெட்டை ஏற்றிக்கொண்ட அமலாபால் விஜய்,விக்ரம் மற்றும் ஜெயம் ரவி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கான ரசிகர்களை பெருக்கிக் கொண்டார்.

இந்நிலையில் இயக்குனர் விஜயின் தயாரிப்பில் அமலாபால் நடித்துக் கொண்டிருந்த போது அவருடன் காதல் வயப்பட்டு 2014ஆம் ஆண்டு இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துகொண்டார். திருமணமான சில ஆண்டுகளில் இருவருக்கும் இடையேயான கருத்து வேறுபாட்டால் அமலாபால் இயக்குனர் விஜய்யை விவாகரத்து செய்து கொண்டார்.

அதன் பின் பல நல்ல படங்களை கொடுத்த அமலாபால்,ஆடை படத்தின் மூலம் நடிப்பின் உச்சத்திற்கே சென்று ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொண்டார். இருப்பினும் இப்படத்தின் மூலம் சிலரது வெறுப்பையும் வாங்கிக்கொண்டார்.

தற்போது முரட்டு சிங்கிள் ஆக வலம் வந்து கொண்டிருக்கும் அமலாபால் தன்னுடைய இன்ஸ்டகிராம் பேஜில் பல கவர்ச்சி படங்களை வெளியிட்டு டிரெண்ட் செய்து கொண்டுள்ளார். இப்பொழுது புதிதாக நீச்சல் உடையில் கடற்கரையில் நிற்பது போல் ஒரு புகைப்படத்தினை எடுத்து வெளியிட்டுள்ளார்.இப்புகைப்படம் காட்டு தீ போல் வைரலாகி வருகிறது.