பிரபல இயக்குனருடன் ஜோடி சேரும் அமலா பால்! அந்த இயக்குனர் யார்?

Photo of author

By Parthipan K

தற்போது நடிகை அமலாபால் 19 வயது மட்டும் வித்தியாசம் உள்ள ஒரு பிரபல இயக்குனருடன் ஜோடி சேர்ந்து தனது அடுத்த திரைப்படத்தில் நடிக்க உள்ளார் எனும் தகவல் கிடைத்துள்ளது. இவர் ஒரு ரொமான்டிக் இயக்குனர் ஆவார். இவர் தனது இயக்குனர் பயணத்தை தொடங்கினார்.

‘மின்னலே’ திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகி, விண்ணைத்தாண்டி வருவாயா,  என்னை அறிந்தால், காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம்,  நீதானே என் பொன் வசந்தம் போன்ற திரைப்படங்கள் இவர் இயக்கிய  திரைப்படங்கள் ஆகும்.

இவை இல்லாமல் பல திரைப்படங்கள் இவர் இயற்றியுள்ளார். அத்திரைப்படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் பல திரைப்படங்களுக்கு தமிழ் பெயரை வைப்பதில் இவருக்கு ஆர்வம் அதிகம் என்று சொல்லலாம்.

தற்போது இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனும் நடிகை அமலாபாலும் இணைந்து ஆந்தாலஜி எனும் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர் இந்த ஆந்தாலஜி திரைப்படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இத்திரைப்படத்தின் கதை கௌதம் மேனனின் காதல் கதையை தழுவி இருக்கும் என்கின்றனர் படக்குழுவினர்.