”விஜய்யை வைத்து கிராவிட்டி மாதிரி ஒரு படம் தயாரிக்கணும்…” அமலா பால் ஆசை!

0
104

”விஜய்யை வைத்து கிராவிட்டி மாதிரி ஒரு படம் தயாரிக்கணும்…” அமலா பால் ஆசை!

நடிகை அமலா பால் நடித்துள்ள காடவர் என்ற திரைப்படம் அடுத்த வாரம் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது.

தமிழ் சினிமா ரசிகர்களை மைனா படம் மூலம் கவர்ந்தவர் அமலா பால். பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் மாதிரி சாதாரணமாக இருப்பதால் சுலபமாக ரசிகர்களை கவர்ந்தார். ஆனால் அவரின் முதல் படம் சர்ச்சைகளைக் கிளப்பிய சிந்து சமவெளி. ஆனால் அதன் பின்னர் திறமையான நடிகை என்ற பெயரை மைனா மூலமாக பெற்றார்.

தெய்வ திருமகள் மற்றும் தலைவா படத்தின் போது இயக்குனர் ஏ எல் விஜய்யோடு காதல் மலர்ந்து அவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அந்த மண வாழ்க்கை சில ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. இதையடுத்து கூடுதல் கவர்ச்சியோடு பல படங்களில் நடித்து வந்தார். ஆனாலும் முன்னர் போல இப்போது வாய்ப்புகள் அவருக்கு இல்லை.

இந்நிலையில் அவர் நடித்துள்ல கடாவர் என்ற பன்மொழி திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாக உள்ளது. இந்த படத்தில் அவர் தடயவியல் நிபுணராக நடித்துள்ளார். படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் இப்போது அவர் கலந்துகொண்டு வருகிறார்.

இந்நிலையில் நடிகர் விஜய் பற்றி ஒரு நேர்காணலில் கூறியுள்ள அவர் “விஜய்யை வைத்து ஒரு படம் தயாரிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. அப்படி தயாரித்தால் அந்த படம் ஹாலிவுட் படமான கிராவிட்டி போல பிரம்மாண்டமாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.