சரக்கு பாட்டிலுடன் நடனம் ஆடும் அமலாபால்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Photo of author

By Rupa

சரக்கு பாட்டிலுடன் நடனம் ஆடும் அமலாபால்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

அமலாபால் முதன் முதலில் கேரளா திரைப்படம் ஒன்றில் அறிமுகமானார்.அதனையடுத்து தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார்.தமிழில் முதலில் வீரசேகரன் என்ற தமிழ் படத்தில் நடித்தார்.அதனையடுத்து சிந்து சமவெளி என்ற படத்ததில் நடித்தார்.இந்த படங்களை விட இவருக்கு அதிக பெயர் வாங்கி கொடுத்த படம் மைனா.இந்த படத்திற்கு இவருக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த படத்தில் தமிழ் ரசிகர்களை அதிகளவு கவர்ந்தார்.அதனையடுத்து மீண்டும் இவருக்கு மலையாளப் படங்கள் நடிக்க வாய்ப்புகள் வந்தது.

அந்த படங்களை முடித்துவிட்டு மீண்டும் தமிழ் படங்களில் நடிப்பதற்கு வந்தார்.அப்பொழுது அவர் நடித்த படங்கள்,விகடகவி மற்றும் தெய்வத்திருமகள் ஆகும்.தெய்வத்திருமகள் படத்தை எடுத்த இயக்குனர் விஜய் மற்றும் அமலாபால் ஆகியோர் காதலித்து வந்தனர்.அதனையடுத்து இருவரும் 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.அதனையடுத்து அமலாபால் நடிகர் விஜயுடன் தலைவா என்ற படத்தில் ஜோடியாக  நடித்தார்.இப்படம் அதிகளவு வெற்றியடையவில்லை என்றாலும்,விஜய்-க்கு ஜோடியாக நடித்ததால் அதிகளவு பிரபலமடைந்தார்.அதனையடுத்து அமலாபாலுக்கும் இயக்குனர் விஜயிக்கும் திருமணத்திற்கு பிறகு அதிகளவு கருத்து வேறுபாடுகள் நடந்து வந்துள்ளது.அதனால் இவர்கள் இருவரும் நீதிமன்றத்திற்கு சென்று விவாகரத்து பெற்றுக்கொண்டனர்.

https://www.instagram.com/reel/CUC_T81Fm0J/?utm_source=ig_web_copy_link

அதனையடுத்து அமலாபால் பல படங்களில் தற்போது வரை நடித்து வருகிறார்.இவர் எடுத்துகொள்ளும் போட்டோ ஷூட் புகைப்படங்களை  அன்றாடம் அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்து வருவதை வழக்கமாக் கொண்டுள்ளார்.அதனை இவரது ரசிகர்கள் லைக் செய்தும் ஷேர் செய்தும் வருவர்.தற்போது அமலாபால் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது நபர்களுடன் சேர்ந்து இருப்பது போல் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.அந்த வீடியோவில் அமலாபால் தனது கையில் மதுபாட்டில் வைத்துக்கொண்டு நடனம் ஆடுகிறார்.இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் அதிகளவு வைரலாகி வருகிறது.இவரது ரசிகர்கள் அமலாபால் இவ்வாறு மதுபாட்டில் வைத்துக்கொண்டு நடனம் ஆடுவதை கண்டித்து வருகின்றனர்.