17 வயதில் சிந்து சமவெளி.. அந்த படத்தை என் அப்பவே பார்த்தார்!! அமலாபால் ஓபன் டாக்!!

0
6
Amalapal Open Talk on Acting in Indus Valley
Amalapal Open Talk on Acting in Indus Valley

Cinema: மைனா படத்தின் மூலம் அமலா பால் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானாலும், அதற்கு முன் சிந்து சமவெளி என்ற படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அப்படத்தில் மகன் வெளியே சென்று படிக்கவே மாமனாருடன் தொடர்பு வைத்துக்கொள்வது போலவும் அவர் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வது போன்ற திரைக்கதை இருந்திருக்கும். இந்தப் படத்தின் மூலம் அவருக்கு பல விதங்களில் இன்னல்கள் ஏற்பட்டுள்ளது என தற்சமயம் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

நான் சிந்து சமவெளி படம் நடித்த பொழுது எனக்கு 17 வயது மட்டும் தான். அந்த படத்தை எனது அப்பா பார்த்து மிகவும் வருத்தப்பட்டார். இயக்குனர் என்ன சொன்னாரோ அதை அப்படியே நடித்து கொடுத்தேன். அவ்வாறு நடித்ததால் சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மிகப்பெரிய அளவில் ஹிட்டான மைனா பட புரோமோஷனுக்கு கூட இதனால் என்னால் போக முடியவில்லை. அச்சமயம் பெரிய நடிகர்களான கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்டோர் எனக்கு போன் செய்து ஆதரவு அளித்தார்கள்.

மேற்கொண்டு அந்த சிந்து சமவெளி படத்தினால் சென்னைக்கு கூட வரமுடியாத சூழல் உண்டானது. அதனை முறியடித்து பல வெற்றி படங்களை கொடுத்து மக்கள் மனதில் நற்பெயர் பெற்றேன். இப்பொழுது தான் புரிந்து கொண்டேன் சினிமா வியாபாரத்திற்காக மட்டுமே என்று, இதனால் ஒரு நடிகைக்கு எவ்வளவு இன்னல்கள் வந்தாலும் அதனை தாங்கிக் கொண்டு அடுத்த கட்டத்தை நகர்த்த வேண்டும் என்பது எனக்கு இந்த சம்பவத்தின் மூலம் புரிந்துள்ளது எனக் கூறியுள்ளார்.

Previous articleலக்னோ VS மும்பை இந்தியன்ஸ்.. ரிஷப் பண்ட்-க்கு வழங்கிய லாஸ்ட் ஜான்ஸ்!! கேப்டன் பதவிக்கு வந்த கெடு!!
Next articleமும்பை இந்தியன்ஸ் நிலையை ஜாஹிர் கானிடம் உளறிய ரோஹித்.. வெளியான ஆடியோவால் உண்டான சர்ச்சை!!