ADMK DMK: ரியல் மேஜர் முகுந்த் வரதராஜன் இறந்ததற்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா கண் கலங்கியதாக அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை தெரிவித்துள்ளார்.
தீபாவளியை முன்னிட்டு சிவகார்த்திகேயன் சாய் பல்லவி நடிப்பில் அமரன் படம் வெளியாகியுள்ளது. இந்தப்படம் வெளியாக நேர்மறையான பல திரை விமர்சனங்களை மக்கள் கொடுத்து வருகின்றனர். இப்படம் உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்டதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இவ்வாறு இருக்கையில் இந்தப் படம் கமல் ஹாசனின் தாயாரிப்பு நிறுவனம் வெளியிட்டதால் முதல்வர் இப்படத்தை பார்த்து படக் குழுவிற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.அதுமட்டுமின்றி இந்தப்படம் மனதை மிகவும் பாதித்ததாகவும் கண்கலங்கி விட்டதாகவும் முதல்வர் தெரிவித்திருந்தார்.
ஆனால் மறைந்த முதல்வர் நிஜ முகுந்த் இறந்தபோதே தனது இரங்கலை அவரது குடும்பத்திற்கு தெரிவித்ததோடு கலங்கி நின்றவர் ஜெ ஜெயலலிதா தான் என அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை கூறியுள்ளார். மேற்கொண்டு அவர் ஆட்சியில் இருந்த போது தான் தீவேரவாதிகளின் தாக்குதலில் போது முகுந்த் இறக்க நேரிட்டது. அச்சமயத்தில் அமைச்சரை அனுப்பி அக்குடும்பத்திற்கு ரூ 10 லட்சம் ரொக்கம் அனுப்பியதோடு அரசு மரியாதைக்கும் ஏற்பாடு செய்திருந்தார்.
தற்பொழுதைய முதல்வர் ரீல் முகுந்தை பார்த்து இப்போதுதான் கண் கலங்கியுள்ளார். ஆனால் மறைந்த அம்மா அப்போதே தனது இரங்கலை அந்த குடுமபத்தினருடன் பகிர்ந்துள்ளார் என அதிமுக வழக்கறிஞர் கூறியுள்ளார். இதுகுறித்து முழு விவரங்களை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதால் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.