இஸ்லாமியர்களை இழிவுபடுத்தியதா அமரன் திரைப்படம்!! உண்மைதான் படமாக்கப்பட்டது – எல்.முருகன் ஓபன் டாக்!!

Photo of author

By Sakthi

Amaran movie:அமரன் திரைப்படம்  இஸ்லாமிய வெறுப்பு அரசியலை புகுத்துகிறது
என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உலக நாயகன் கமல்ஹாசனின்,  “ராஜ்கமல் நிறுவனம்” தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி அன்று வெளியான படம் தான் அமரன்.இந்த  படம்  ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன்  வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டது. இப்படத்தினை ராஜ்குமார் பெரியசாமி இயக்கினர். இந்த படம் வசூல் ரீதியாக வெற்றி  படமாக அமைந்தது.
இந்த படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக காட்சிப்படுத்தி உள்ளது என்றும்,ஜெய்ஹிந்த் என்ற முழக்கத்துக்கு  பதிலாக   ஜெய் பஜ்ரங் பலி என்று ஆர்எஸ்எஸ் முழக்கம் பயன்படுத்தி சிறுபான்மையினர் மீது வெறுப்பு உணர்வை தூண்டுகிறது அமரன் படம். இதனால் தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் மற்றும் திரையரங்கை முற்றுகையிடும் போராட்டத்தை  நடத்தினார்கள்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றி ல் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து  இருக்கிறார். அதாவது அமரன் படம்  உண்மைச்  சம்பத்தை சொல்லியிருக்கிறார்கள், நமது நாட்டிற்கு அமரன் போன்ற தேச பக்தி மிக்க படங்கள் நிறைய வர வேண்டும், இப் படம் தணிக்கை குழுவினர் ஆய்வுக்கு உட்பட்டது தான் திரைக்கு வந்துள்ளது.
இப்படம் எவற்றையும் தவறாக சித்தரிக்கவில்லை, ஜம்மு காஷ்மீரில் என்ன நடக்கிறதோ அந்த , உண்மை கருத்தை தான் அமரன் படத்தில் சொல்லி இருக்கிறார்கள். இது மேலும் பாராட்டுவதற்குரியதாகும் என  அமரன் படம் பற்றி கருத்து தெரிவித்தார்  எல்.முருகன்.