இன்று அமாவாசை முன்னோர்களின் ஆசி பெற எளிய பரிகாரம்..!

Photo of author

By Priya

நாளைய தினம் மே 7 ஆம் தேதி சித்திரை மாதம் (Amavasai Date 2024 in Tamil ) அமாவாசை திதி வருகிறது. பொதுவாக இந்து சாஸ்திரத்தின் படி அமாவாசை, பெளர்ணமி நாட்கள் முக்கியமான நாட்களாக கருதப்படுகிறது. இந்த அமாவாசை (Amavasai 2024) நாட்களில் இறந்து போன நமது முன்னோர்களுக்கு தர்பணம் கொடுப்போம். இந்நாளில் நம் பித்ருக்களுக்கு விரதம் இருந்து அவர்களுக்கு தர்பணம் கொடுத்தால் அவர்களின் ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம்.

அமாவாசை நாட்களில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்து புனித தலங்களுக்கு சென்று அங்கு உள்ள கடல்களில் நீராடி விட்டு அவர்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள். அவ்வாறு செய்தால் நம் முன்னோர்கள் ஆத்மா சாந்தியடையும் என்பது நம்பிக்கை. ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் அருகில் உள்ள நீர் நிலைகளுக்கு சென்று அங்கு தர்ப்பணம் செய்வார்கள். ஆனால் தற்போதைய நிலையில் நீர் நிலைகளுக்கு செல்ல இயலாதவர்கள் வீட்டிலேயே தர்ப்பணம் கொடுக்கலாம்.

அமாவாசை (Amavasai viratham 2024) தினத்தன்று அதிகாலை எழுந்து  குளித்துவிட்டு, விரதம் இருக்க வேண்டும். அன்றைய வீடுகளை சுத்தம் செய்து, விரதம் இருப்பர்கள் அவர்களின் முன்னோர்களை மனதில் நினைத்து வழிபட வேண்டும். காலை எந்த ஆகாரமும் எடுத்துக்கொள்ளாமல் மதியம்  சாப்பாடு தயாரித்து அதனை நம் முன்னோர்களுக்கு படைக்க வேண்டும். நீங்கள் விரத்தை முடிப்பதற்கு முன்பாகவே அந்த சாப்பாட்டில் காக்கைக்கு சிறிது வைத்து அதை சாப்பிட அழைக்க வேண்டும். காகத்திற்கு உணவு படைப்பது நமது இந்து சாஸ்திரத்தின் வழக்கம். காக்கை வடிவத்தில் நம் முன்னோர்கள் வந்து சாப்பாடு சாப்பிடுவார்கள் என்பது ஐதீகம்.

இந்த விரதம் தொடங்குவதற்கு முன்பாகவே பசு மாட்டிற்கு அகத்திக்கீரை கொடுக்க வேண்டும். அன்றைய தினம் உங்கள் முன்னோர்களை மனதில் நினைத்து இயலாதவர்களுக்கு ஒரு வேளை உணவு வாங்கி கொடுக்கலாம். இதன் மூலம் உங்கள் முன்னோர்களின் ஆத்மா சாந்தியடையும். அவ்வாறு செய்ய இயலாதவர்கள் சிறிது கருப்பு எள் எடுத்து அதனை அவர்களின் படத்திற்கு முன்பாக வைத்து நீர் விட்டு வழிபட்டால் போதும் உங்கள் பித்ருக்களின் ஆசி முழுமையாக நீங்கள் பெறலாம்.

இவ்வாறாக (Chithirai Amavasai Date 2024) நம் முன்னோர்களுக்கு மறக்காமல் ஒவ்வொரு அமாவாசை நாளிலும் தர்ப்பணம் கொடுத்து வந்தால் அவர்களின் ஆசியை நீங்கள் முழுமையாக பெறலாம். உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பெருகும்.