ரேஷன் அட்டைதாரர்களுக்கு அசத்தல் அறிவிப்பு!! இன்று முதல் பொருட்கள் விநியோகம்!!
ரேஷன் கடை ஊழியர்கள் பல்வேறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இன்று முதல் காலவரையற்ற போராட்டத்தை நடத்துவதாக அறிவிப்ப ஒன்றை வெளியிட்டு இருந்தனர்.
அந்த வகையில் இவர்கள், ரேஷன் கடைகளை வருவாய்த்துறையும் கூட்டுறவு துறையும் இணைந்து கண்காணித்து வருவதால் அவர்களால் திறம்பட செயல்பட முடியவில்லை என கூறியுள்ளனர்.
எனவே இதற்கென்று தனித்துறையை அமல்படுத்த வேண்டும் என கூறியுள்ளனர். மேற்கொண்டு ரேஷன் கடை ஊழியர்கள் மீது தொடர்ந்து வரும் புகாராக இருப்பது என்னவென்றால் வாங்காத பொருள்களுக்கும் ரசீது கொடுப்பதாக கூறுகின்றனர்.
இதனை தடுக்க அவர்கள் வாங்கும் பொருட்களின் விவரங்களை அனுப்பும் விதமாக 4ஜி சிம் வழங்க வேண்டும் என கூறியுள்ளனர். அதுமட்டுமின்றி பல்வேறு இடங்களில் ரேஷன் கடை ஊழியர்கள் பற்றாக்குறை இருப்பதால் ஒருவரே இருகடைகளை பார்த்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை தவிர்க்க ஊழியர்களை பணி நியமனம் செய்யும்படியும் பலமுறை கோரிக்கை வைத்தும் தமிழக அரசு கண்டு கொள்ளவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனை எல்லாம் மையமாக வைத்து தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு ரேஷன் கடை ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்தை இன்று முதல் நடத்துவதாக கூறியிருந்தனர்.
ஆனால் தற்பொழுது தமிழகத்தில் அமைச்சர் கைது செய்யப்பட்டு பரபரப்பான சூழல் நிலவு வருவதால் இந்த காலவரையற்ற போராட்டத்தை தள்ளி வைத்துள்ளதாக நியாய விலை கடை பணியாளர் சங்கத் தலைவர் பாலகிருஷ்ணன் தற்பொழுது கூறியுள்ளார்.
இதனால் மக்களுக்கு சீரான முறையில் முன்பை போலவே பொருள்கள் வினியோகம் செய்யப்படும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.