முகம் பளிச் என பொலிவு பெற அற்புதமான பேஸ் பேக்!!
முகம் அழகாக இருக்க வேண்டும் என்பது எல்லா மனிதர்களுக்கு இயல்பாக இருக்கும் ஆசை தான். அதனால் நாம் கடைகளில் கிடைக்க கூடிய இன்ஸ்டன்ட் அழகு கிரீம்களை வாங்கி பயன்படுத்துகிறோம். அது பக்க விளைவுகளை உண்டாக்கும். எனவே இயற்கை வலிகளைப் பின்பற்றி முகத்தை அழகாக்குவது எப்படி என்பதை பற்றி பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
* தக்காளி
* உருளைக்கிழங்கு
* கடலை மாவு
* காபி தூள்
செய்முறை:
தக்காளி மற்றும் உருளைக்கிழங்கு இரண்டையும் தோல் நீக்கி மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். இதனுடன் சிறிதளவு கடலை மாவு மற்றும் காபி தூள் சேர்த்து நன்கு கலந்து எடுத்துக் கொள்ளவும்.
இக்கலவையை முகத்தில் ஃபேஸ் பேக் போன்று அப்ளை செய்து 20 நிமிடங்கள் காய வைக்கவும். பின்னர் அதனை உரித்து எடுத்து விடுங்கள். இவ்வாறு வாரத்தில் மூன்று நாட்களுக்கு செய்து வருகையில் முகம் பருக்கள் நீங்கி கருமை மறைந்துவிடும்.
தக்காளி மற்றும் உருளைக்கிழங்கில் ஆன் டி ஆக்ஸிடெண்ட்கள் நிறைந்துள்ளன. இது சர்வத்தில் இருக்கும் பாக்டீரியாக்களை வெளியேற்ற உதவுகிறது. அவற்றில் உள்ள அமில பண்புகள் அடைப்பட்ட துளைகளை திறக்கிறது.