இதை செய்தால் ஈசியாக வீட்டுக் கடன் தொழில் கடன் வாங்கலாம்!! உடனே தெரிந்துகொள்ளுங்கள்!!

0
121
#image_title

இதை செய்தால் ஈசியாக வீட்டுக் கடன் தொழில் கடன் வாங்கலாம்!! உடனே தெரிந்துகொள்ளுங்கள்!!

நம்மில் பலர் நம்முடைய பெரிய தேவைகளை நிறைவு செய்ய கடன் வாங்குவோம். வீடு கட்டுவதற்கு கடன், தொழில் தொடங்க கடன், தொழிலை விரிவுபடுத்த கடன், சொத்த தேவைகளுக்காக கடன், மின்சாதன பொருள்களை வாங்குவதற்கு கடன் என்று பல வகையான தேவைகளுக்கு கடன் வாங்குவோம்.

இந்த வகை லோன்களை மட்டும் அல்ல லோன் என்று வாங்க முடிவு செய்துவிட்டால் நாம் சிபிள் ஸ்கோர் என்பதை செக் செய்ய வேண்டும். இந்த சிபிள் ஸ்கோர் என்பது நம்முடைய பான் கார்டை வைத்து முன்னதாக எதாவது கடன் வாங்கி இருக்கிறோமா, அந்த கடனை சரியாக கட்டி இருக்கிறோமா அல்லது அந்த கடனை திருப்பி கட்டாமல் எதாவது ஒரு சிக்கலில் இருக்கிறோமா என்ற தரவுகளின் அடிப்படையில் நமக்கு குறிப்பிட்ட மதிப்பெண்கள் வழங்கப்படும். இந்த குறிப்பிட்ட மதிப்பெண்கள் தான் சிபிள் ஸ்கோர் என்று அழைக்கப்படுகிறது. இந்த சிபிள் ஸ்கோரை அடிப்படையாகக் கொண்டுதான் நமக்கு கடன்கள் வழங்கப்படுகிறது.

300 முதல் 900 வரையில் மூன்று இலக்க எண்களை கொண்டது தான் சிபிள் ஸ்கோர். மிக அதிகமான சிபிள் ஸ்கோர் உங்களுக்கு உள்ளது என்றால் உங்களுக்கு நல்லெண்ணம் மதிப்பின் அடிப்படையில் உங்களுக்கு சுலபமாக கடன் கிடைக்கும். 750க்கும் அதிகமாக மதிப்பெண்களை சிபில் ஸ்கோராக கொண்டவர்களுக்கு சுலபமாக லோன் கிடைக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது.

எப்படி சிபில் ஸ்கோரை செக் செய்வது

உங்களுக்கான சிபில் ஸ்கோரை ஆண்டுக்கு ஒரு முறை இலவசமாக நீங்களே செக் செய்து கொள்ளலாம். இதை நீங்களே ஆன்லைனில் செக் செய்து பார்க்கலாம்.

ஆன்லைனில் எவ்வாறு சிபில் ஸ்கோரை செக் செய்வது

* முதலில் சிபில் ஸ்கோரின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.cbil.com இணையதளத்திற்கு செல்லவும்.

* அதில் கெட் யுவர் சிபிள் ஸ்கோர் என்பதை கிளிக் செய்யவும்.

* அடுத்து கிளிக் ஹியர்(Click Here) என்பதை கிளிக் செய்து அதில் கேட்கப்படும் விவரங்களை கொடுக்க வேண்டும்.

* அதில் உங்கள் பெயர், இ மெயில் முகவரி, அடையாள அட்டைகளின் எண்கள் (பாஸ்போர்ட், பான் கார்டு, ஆதார் அல்லது வோட்டர் ஐடி) கொடுக்க வேண்டும். பின்னர் பின்கோடு மற்றும் போன் நம்பர் கொடுத்து அதில் இருக்கும் அசெப்ட் மற்றும் கண்டினியூவ்(Accept and Continue) என்பதை கிளிக் செய்யவும்.

* நீங்கள் கொடுத்த மொபைல் எண்ணிற்கு ஓடிபி வரும். அந்த ஓடிபி எண்களை கொடுக்கவும். கொடுத்த பிறகு உங்களுக்கு டேஷ்போர்ட் பகுதி வரும்.

* அந்த டேஷ்போர்டுக்கு சென்று உங்களது சிபில் ஸ்கோரை செக் செய்யலாம். இதையடுத்து அடுத்த பக்கத்திற்கு ரீடேரக்ட் செய்யப்படும்.

* இந்த பக்கத்தில் நீங்கள் லாகின் செய்வதன் மூலமாக உங்களது சிபில் ஸ்கோரை செக் செய்யலாம்.

உங்களின் சிபில் ஸ்கோரை எவ்வாறு மேம்படுத்துவது

உங்களின் சிபில் ஸ்கோரை மேம்படுத்த முதலில் நீங்கள் வாங்கி இருக்கும் கடன் தொகையை தவணை இன்றி அடைத்திருக்க வேண்டும். உங்களின் சிபில் ஸ்கோரில் 30 சதவீதம் மட்டுமே கிரெடிட் யூடிலைசேசன் செய்ய வேண்டும்.

உங்களது சிபில் ஸ்கோரை மேம்படுத்த செக்யூர்ட் மற்றும் அன் செக்யூர்ட் என இரண்டு வகைகளில் கடன் வாங்க வேண்டும். அதாவது கிரெடிட் கார்டு மூலமாக வாங்கும் கடன் அன் செக்யூர்ட் லோன் ஆகும். வீட்டுக் கடன், வாகனக்கடன் ஆகியவை செக்யூர்ட் லோன் வகை ஆகும்.