கரும்புள்ளிகளை மறையச் செய்யும் அற்புத பேஸ் பேக்!! இனி வீட்டிலேயே தயார் செய்யலாம்!!

Photo of author

By Divya

கரும்புள்ளிகளை மறையச் செய்யும் அற்புத பேஸ் பேக்!! இனி வீட்டிலேயே தயார் செய்யலாம்!!

Divya

Updated on:

Amazing base pack to fade dark spots!! Now you can prepare it at home!!

சரும பிரச்சனைகளில் ஒன்றான கரும்புள்ளிகள் முகத்தில் தென்பட்டால் முக அழகு குறைந்துவிடும்.இந்த கரும்புள்ளிகள் மறைய கீழே கொடுக்கப்படுட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சிக்கவும்.

தேவையான பொருட்கள்:-

1)கற்றாழை ஜெல்
2)உளுந்து பருப்பு மாவு
3)தேன்
4)எலுமிச்சை சாறு
5)உருளைக்கிழங்கு சாறு

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு உருளைக்கிழங்கை தோல் நீக்கிவிட்டு பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.பிறகு ஒரு பாத்திரம் எடுத்து நறுக்கிய உருளைக்கிழங்கை போட்டு தண்ணீர் விட்டு அலசி சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு மைய்ய அரைத்து ஒரு கிண்ணத்திற்கு சாறை மட்டும் பிழிந்து எடுத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாற்றை ஒரு கிண்ணத்திற்கு பிழிந்து கொள்ளுங்கள்.இந்த சாறை உருளைக்கிழங்கு சாறுடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

அடுத்து அடுப்பில் வாணலி வைத்து சூடாக்கி கொள்ளுங்கள்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி உளுந்து பருப்பு சேர்த்து வறுத்து ஆறவிடவும்.பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்து சலித்துக் கொள்ளுங்கள்.

இந்த உளுந்து பருப்பு பொடியை உருளைக்கிழங்கு சாறுடன் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யுங்கள்.பிறகு ஒரு கற்றாழை மடலை தோல் நீக்கி அதன் ஜெல்லை தனியாக பிரித்தெடுத்துக் கொள்ளுங்கள்.

இந்த கற்றாழை ஜெல்லை தயாரித்து வைத்துள்ள கலவையில் சேர்த்து நன்றாக கலக்கி முகம் முழுவதும் அப்ளை செய்து கொள்ளுங்கள்.இதை அரை மணி நேரத்திற்கு உலரவிட்டு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் கரும்புள்ளிகள் அனைத்தும் நீங்கிவிடும்.