இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில் அசத்தல் வேலை!! விண்ணப்பம் செய்ய செப்டம்பர் 18 இறுதி நாள்!!

Photo of author

By Divya

இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில் அசத்தல் வேலை!! விண்ணப்பம் செய்ய செப்டம்பர் 18 இறுதி நாள்!!

இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி(Small Industries Development Bank of India – SIDBI) காலியாக உள்ள Marketing and Promotions Consultant பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.இப்பதவிக்கு தகுதி இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வருகின்ற செப்டம்பர் 18 வரை ஆன்லைன்(மின்னஞ்சல் வழியாக) வரவேற்கப்பட இருக்கின்றன.

நிறுவனத்தின் பெயர்: இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி(Small Industries Development Bank of India – SIDBI)

பதவி: Marketing and Promotions Consultant

காலியிடங்கள்: Marketing and Promotions Consultant பணிக்கென ஒரு காலியிடம் ஒதுக்கப்ட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி: Marketing and Promotions Consultant பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம்(Degree) பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: இப்பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 45 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.மத்திய அரசின் விதிகளின் படி வயது வரம்பில் சில தளர்வுகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாத சம்பளம்: இப்பதவிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு நிறுவன விதிமுறைப்படி ஊதியம் வழங்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

இப்பதவிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்கள் //www.sidbi.in/en என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.பின்னர் அதனை பூர்த்தியிட்டு ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு ஆன்லைன் வழியாக அனுப்பி வைக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்னஞ்சல் முகவரி: [email protected]

முகவரி:

SIDBI,SWAVALAMBAN BHAVAN,C-11,G-Block,Bandra-Kurla Complex,Bandra East,Mumbai-400051.

கடைசி தேதி: இப்பதவிக்கு விண்ணப்பம் செய்ய வருகின்ற செப்டம்பர் 18 இறுதி நாள் ஆகும்.