போன் பே பயனாளர்களுக்கு வெளிவந்த அசத்தல் அப்டேட்! இனி இதுவும் செய்து கொள்ள முடியும்!
உலக அளவில் தொழில்நுட்பம் அதிகளவு வளர்ந்து கொண்டே வருகின்றது. நம்முடைய ஒவ்வொரு தேவைகளும் அதன் மூலம் பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே இணைய வழி பரிவர்த்தனைகள் மற்றும் பல செயலிகளும் அதிகரித்து வருகின்றது. கூகுள் பே, போன் பே, பேடிஎம் உள்ளிட்ட செயலிகள் நுகர்வோருக்கு விற்பனையாளர்களுக்கு அதிக அளவு பயன்படுகிறது.
இந்தியாவில் கூகுள் பே மற்றும் போன் பே செயலி மூலம் பண பரிவர்த்தனை பலரும் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஆண்டில் ஒரு ட்ரில்லியன் டாலர் கோடி அளவிலான பரிவர்த்தனைகளை செய்து இந்தியாவின் மிகப்பெரிய யுபியை செயலியாக போன் பே தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. இதனால் தனது பயனாளர்களுக்கு பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்ய போன் பேய் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் அவற்றில் யுபிஐ லைட், யுபியை இன்டர்நேஷனல், கிரெடிட் ஆன் யுபிஐ போன்றவையும் அடங்கும் என தெரிவித்துள்ளது. தற்போது மாறிவரும் காலகட்டத்தில் வீட்டில் இருந்தபடியே அனைத்து பொருட்களையும் வாங்கும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.
அதில் ப்ளிப்கார்ட், அமேசான் போன்ற செயலிகள் முன்னிலையில் இருக்கின்றது. அதுபோலவே தான் பணப்பரிவர்த்தனைகளில் கூகுள் பே , போன் பே போன்றவைகள் முன்னிலையில் இருக்கின்றது. அதில் போன் பே பயனாளர்களுக்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றது.