புதிதாக திட்டத்தை கொண்டு வந்து அசத்தும் அமேசான் நிறுவனம்!

Photo of author

By Kowsalya

அமேசான் தனது ஆரம்பக் கட்ட தொழில் திட்டமான ஃப்யூச்சர் இன்ஜினியர் என்ற திட்டத்தை இந்தியாவில் தொடங்க திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியில் அமெரிக்காவில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

 

அதில் மாணவர்கள் கணினி மற்றும் கணினி குறியீடுகளை கற்க உதவும் கணினி அறிவியல் வகுப்புகளுக்கு நிதி அளித்து மாணவர்களின் திறனை மேம்படுத்துகிறது.

அமேசான் நிறுவனம் இந்தியாவில் ஃப்யூச்சர் இன்ஜினியர் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த ஒரு மேலாளரை நியமித்தது. அந்த தலைமை நிர்வாகி பெயர் பெசோஸ். ஜெப் பெசோஸ் இந்தியாவிற்கு வந்து நாட்டில் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களை டிஜிட்டல் மயமாக்கவதற்காக ஒரு பில்லியன் டாலர் அதாவது இந்திய ரூபாயில் சுமார் 7319 கோடி முதலீடு செய்வதாக ஏற்கனவே அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அமேசான் 2021 ஆம் ஆண்டில் இந்த திட்டத்தை இந்தியாவில் தொடங்க திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான தலைமையகமாக பெங்களூரில் உள்ள அமேசான் நிறுவனம் இருக்கும் என்றாலும், இந்த திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

அமேசானின் இந்த ஃப்யூச்சர் இன்ஜினியர் திட்டம் ஒவ்வொரு ஆண்டும் சமூகத்தில் கீழ்படிந்துள்ள மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.

அதுமட்டுமின்றி ஒவ்வொரு ஆண்டும் 100 மாணவர்களுக்கு சுமார் 10,000 டாலர் வரை உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

இத்திட்டத்தின் மூலமாக பயிலும் மாணவர்கள் ஒரு ஆண்டு தனது கல்லூரிப் படிப்பிற்கு பிறகு அமேசான் அலுவலகத்திலேயே பணிபுரிய உத்தரவாதம் மற்றும் ஊதியம் மற்றும் இன்டர்ன்ஷிப்பை வழங்க உள்ளதாக அமேசான் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

 

அமேசான் நிறுவனத்தை போல கூகுள் மற்றும் மைக்ரோ சாஃப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் நீண்ட காலமாக இந்திய மாணவர்கள் மீது தங்களது ஆர்வத்தை அதிகமாக வெளிப்படுத்தியுள்ளது.இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஃபேஸ்புக் edutech startup unacademy -யில் முதலீடு செய்துள்ளது. சமீபத்தில் சிபிஎஸ்சி கல்வி வாரியத்துடன் ஒப்பந்தம் செய்து டிஜிட்டல் முறையில் பாதுகாப்பு குறித்து சான்றளிக்கப்பட்ட பயிற்சியையும் மாணவர்களுக்கு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

அமேசான் நிறுவனம் கல்வித் துறையில் முதலீடு செய்ய திட்டமிட்டுவதைத் தவிர, அமேசான் நிறுவனம் தற்போது தனது e-commerce வணிகத்தை நாட்டில் விரிவுபடுத்த மிகவும் கடுமையாக உழைத்து வருகிறது. அதிலும் இந்த கொரோனா காலத்தில் பண்டிகை காலங்களில் மதுபானங்களை வீட்டிற்கே போய் டெலிவரி செய்யும் புதிய உத்திகளையும் ஆராய்ந்து வருகிறது.