ஆன்லைன் சினிமா டிக்கெட்: களத்தில் குதிக்கும் அமேசான்

Photo of author

By CineDesk

ஆன்லைன் சினிமா டிக்கெட்: களத்தில் குதிக்கும் அமேசான்

ஆன்லைன் வர்த்தகத்தில் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகிய இரண்டு நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள அனைத்து துறைகளிலும் கால்பதித்து வணிகம் செய்து வரும் நிலையில் தற்போது அடுத்ததாக சினிமா டிக்கெட் விற்பனையும் செய்யவுள்ளது

அமேசான் நிறுவனம் ’புக் மை க்ஷோ’ ஆன்லைன் டிக்கெட் விற்பனை செய்யும் நிறுவனத்துடன் இணைந்து சினிமா டிக்கெட்டுகளை விற்பனை செய்ய உள்ளது

இதற்காக அமேசான் நிறுவனத்தின் செயலியில் சினிமா டிக்கெட்டுக்கு என ஒரு பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இனிமேல் சினிமா டிக்கெட் எடுப்பவர்கள் தனியாக புக்மைக்ஷோ அல்லது டிக்கெட் நியூ இணையதளங்களுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. அமேசான் செயலிலேயே சினிமா டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்

அது மட்டுமின்றி ஆரம்பகால சலுகையாக குறிப்பிட்ட நாட்களுக்கு முன் பதிவு செய்யும் டிக்கெட்டுக்களுக்கு 2% கேஷ்பேக் சலுகையையும் அமேசான் வழங்கியுள்ளது

தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் இனிமேல் ஆன்லைன் மூலம் தான் டிக்கெட் விற்பனை செய்ய வேண்டும் என்ற வழிமுறையை விரைவில் கொண்டுவர தமிழக அரசு முடிவு செய்துள்ள நிலையில் அமேசான் நிறுவனம் இந்தத் துறையில் இறங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

#