இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக உணவு டெலிவரி சேவை பிரபலமடைந்து வருகிறது. இதில் Swiggy மற்றும் Zomato நிறுவனங்கள் தற்போது முன்னணியில் உள்ளன.
நாளுக்கு நாள் இவர்களின் பயனீட்டாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் இவர்களுக்கு போட்டியாக இறங்கியுள்ளது Amazon நிறுவனம். ஏற்கனவே ஆன்லைன் ஷாப்பிங்க், OTT தளம் என தனது சேவைகளை விரிவாக்கம் செய்தும் வரும் அமேசான், உணவு டெலிவரி சேவையில் இறங்கியிருப்பது மற்ற உணவு டெலிவரி நிறுவனங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதற்கட்டமாகப் பெங்களூருவில் மகாதேவபுரம், வொயிட் ஃபீல்ட் உள்ளிட்ட 4 பகுதிகளில் இந்த சேவை 100 ஓட்டல்களுடன் இணைந்து துவங்கியுள்ளது அமேசான் நிறுவனம். இந்த சேவையை படிப்படியாக நாடு முழுவதும் விரிவுபடுத்தத் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.
இந்த உணவு டெலிவரி சேவையை அமேசான் செயலி மூலமே ஏற்படுத்தப்படுத்தியுள்ளது அமேசான் நிறுவனம். அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் உணவு தொழில் 4 பில்லியன் டாலரில் இருந்து 15 பில்லியன் டாலராக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவித்து உள்ளது.
கொரோனா பாதிப்பால் தனது பணியாளர்களை வேலையை விட்டு Swiggy, Zomato நீக்கி வரும் நிலையில், அமேசானின் இந்த முயற்சி வியப்பை ஏற்படுத்தியுள்ளது.