வங்கக்கடலில் புதிதாக உருவாகி உள்ள ஆம்பன் புயல்! இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

Photo of author

By Parthipan K

வங்க கடலில் உருவான புயல் அதி தீவிர புயலாக மாறியுள்ளது எனவும் வடமேற்கு திசையில் மணிக்கு 6 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்கிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்கக்கடலில் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது இந்த புயலின் பெயர்
ஆம்பன் என தாய்லாந்து பெயர் சூட்டியுள்ளது.

அது மேலும் வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகரத் தொடங்கியுள்ளது தற்போது ஆம்பன் புயல் மிகவும் தீவிரமாக ஆவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆம்பன் புயல் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு வங்க கடலின் மத்தியப் பகுதியின் தெற்கு பகுதியில் மணிக்கு 85 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் எனவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆம்பன் புயல் வருகிற 20-ஆம் தேதி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ஒட்டி கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆம்பன் புயல் உருவாகி உள்ளதால் நாகை, காரைக்கால், பகுதிகளில் உள்ள துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை, கடலூர், பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி, உள்ளிட்ட 9 துறைகளிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.